Published : 17 Mar 2016 09:34 AM
Last Updated : 17 Mar 2016 09:34 AM

அவாக்மஹ் கல்வி நிறுவனத்தில் கிருஷ் கோபால கிருஷ்ணன் முதலீடு

பெங்களூருவை தலைமையாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனமான அவாக்மஹ் (AVAGMAH) கல்வி நிறுவனத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் கிருஷ் கோபால கிருஷ்ணன் முதலீடு செய்திருக் கிறார். மேலும் ஹெக்ஸாவேர் மற்றும் ஆப்டெக் நிறுவனங்களின் நிறுவனர் அதுல் நிஷாரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தி ருக்கிறார். எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது என்பது குறித்து தகவல் வெளியிடப்பட வில்லை.

இந்த நிறுவனம் கடந்த 18 மாதங்களில் 33.6 கோடி ரூபாய் (50 லட்சம் டாலர்) முதலீட்டை திரட்டியுள்ளது. இதே காலத்தில் இந்த நிறுவனம் 8 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. தவிர ஏற்கெனவே இந்த நிறுவனம் லாபத்தில் செயல்பட்டு வருகிறது.

தற்போது கிடைத்துள்ள இந்த நிதியை தொழில்நுட்பம் மற்றும் புதிய பல்கலைக்கழகங்களை வாடிக்கையாளர்களாக சேர்ப்ப தற்காக செலவு செய்ய முடிவெ டுத்துள்ளது. இந்த நிறுவனத்தில் சிங்கப்பூரை சேர்ந்த லயன்ராக் கேபிடல், குரோத் ஸ்டோரி நிறுவனத்தின் கணேஷ் கிருஷ் ணன் மற்றும் ஜோடியஸ் கேபிடல் நிறுவனத்தின் நீரஜ் பார்கவா ஆகியோர் முதலீடு செய்திருக்கின்றனர்.

தற்போது இந்த நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைகழகம் மற்றும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் உள்ள யூசிஎல்ஏ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.

தற்போது இந்த நிறுவனத்தில் 2.4 கோடி மாணவர்கள் மட்டுமே பதிவு செய்திருக்கிறார்கள். 12 கோடி அளவுக்கு வாய்ப்பு இருக் கிறது. இந்த நிறுவனத்துக்கு கல்வித் துறையில் பெரிய அளவில் வளர வாய்ப்பு இருப்பதாக கோபால கிருஷ்ணன் தெரிவித் தார். அடுத்த இரண்டு வருடங் களில் 10 மடங்கு வளர்ச்சி அடைய முடியும் என்று இந்த நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக் தெரிவித்தார். 2013-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x