Published : 17 Mar 2016 09:32 AM
Last Updated : 17 Mar 2016 09:32 AM

கிங்பிஷர் ஹவுஸ் இன்று ஏலம்

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக் காக பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் நிதி மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையா மீது பல்வேறு வழக்குகள் தொடரப் பட்டுள்ளன. வங்கிகள் மற்றும் கடன் கொடுத்துள்ள நிறுவனங்கள் தொடர்ந்துள்ள வழக்கில் நீதிமன்றங்கள் அவருக்கு சம்மன் அனுப்பி வருகின்றன.

இந்த நிலையில் வங்கிகள் அளித்த கடனுக்காக மும்பை யில் உள்ள கிங்பிஷர் இல்லத்தை ஏற்கெனவே எஸ்பிஐ கேப் டிரஸ்டி நிறுவனம் கையகப்படுத்தி யிருந்தது. 2,401.70 சதுர மீட்டர் கொண்ட அந்த கட்டிடம் மார்ச் 17 ம் தேதி ஏலம் விடப்படும் என்று எஸ்பிஐகேப் டிரஸ்டி ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று அந்த கட்டிடம் ஏலம் விடப்பட உள்ளது.

சர்ஃபாசி சட்டத்தின்படி ஆன் லைன் மூலம் இந்த கட்டிடம் ஏலம் விடப்படுகிறது. கட்டிடத்தின் மதிப்பு தோராயமாக ரூ.150 கோடி எனவும், ஏல அடிப்படை மதிப்பு ரூ.150 கோடி எனவும் கூறியிருந்தது. ஏலத்துக்கான முன்வைப்பு தொகை ரூ.15 லட்சமாகவும் நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஏல கேட்பு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிக்கும். இது தொடர்பான பொது அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது.

இந்த கட்டிடம் கிங்பிஷர் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகமாக செயல்பட்டது. தனிநபர்கள், நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கு பெறலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x