Published : 24 Mar 2016 09:41 AM
Last Updated : 24 Mar 2016 09:41 AM

ஐஐஎம்ஏ கல்வி கட்டணம் 5.4% அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி நிர்வாக கல்லூரியான ஐஐஎம் அகமதாபாத்தின் கல்வி கட்டணம் 5.4 சதவீதம் அதிகரிக்கபட்டுள்ளது. இரு வருடம் முதுகலை படிப்புக்கான கட்டணம் 18.50 லட்ச ரூபாயில் இருந்து 19.50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கட்டண உயர்வுக்கு ஐஐஎம் அகமதாபாத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த புதிய கட்டணம் 2016-18-ம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு பொருந்தும் என்று நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த கட்டணம் இரு வருடத்துக்கும் சேர்ந்த கட்டணமாகும். கல்விக்கட்டணம் புத்தகம், மருத்துவக்காப்பீடு, முன்னாள் மாணவர் சங்கத்துக்கான கட்டணம் என அனைத்துக்கும் சேர்ந்து 19.50 லட்ச ரூபாய் கட்டணமாகும்.

இந்த கல்வி நிறுவனத்தின் கல்வி கட்டணம் பணவீக்கத்தின் அடிப்படையில் கடந்த சில வருடங்களாக நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வருடம் 11.44 சதவீதம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு கட்டண உயர்வாகும்.

இரு வருட படிப்புக்கு மட்டுமல்லாமல் ஒரு வருட படிப்புக்கும் கட்டணம் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது. 21.5 லட்ச ரூபாயில் இருந்து 24 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x