Published : 13 Feb 2016 09:34 AM
Last Updated : 13 Feb 2016 09:34 AM

இவரைத் தெரியுமா?- யெலன் மஸ்க்

எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2008-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

சூரிய மின் உற்பத்தி நிறுவனமான சோலார்சிட்டி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் இளநிலை பட்டமும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பட்டமும் பெற்றுள்ளார்.

2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இவரின் சொத்து மதிப்பு ரூ. 84,580 கோடி.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் இருந்து வருகிறார்.

போர்ப்ஸ் வெளியிட்ட மிக இளவயது பணக்காரர்கள் பட்டியலில் 12-வது இடத்தை பிடித்தவர்.

பே-பால் நிறுவனத்தை தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.

2013-ம் ஆண்டு பார்ச்சூன் வெளியிட்ட தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x