Published : 24 Feb 2016 04:06 PM
Last Updated : 24 Feb 2016 04:06 PM

அரசு முதலீட்டை அதிகரிக்கவில்லையெனில் பொதுத்துறை வங்கிகள் மோசமடையும்: மூடிஸ் எச்சரிக்கை

வரவிருக்கும் பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகளுக்கான அரசின் முதலீட்டை அதிகரிக்கவில்லை எனில் அவ்வங்கிகளின் நிலைமை மோசமடையும் என்று குளோபல் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியான மூடிஸ் எச்சரித்துள்ளது.

2016-ம் நிதியாண்டு தொடங்கி 4 ஆண்டுகளுக்கு நாட்டில் உள்ள 22 பொதுத்துறை வங்கியிலும் மத்திய அரசு ரூ.70,000 கோடி கூடுதல் முதலீட்டுதவி செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் மூடிஸ், முதலீடு இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று கூறுகிறது.

இது குறித்து மூடிஸின் சீனியர் கிரெடிட் ஆபீசரும் துணைத் தலைவருமான ஸ்ரீகாந்த் வத்லாமணி கூறும்போது, “நாங்கள் மதிப்பிடும் 11 பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விகிதம் டிசம்பர் 31, 2015-ல் முடிந்த காலாண்டில் 0.9-4.1% அதிகரித்துள்ளது. எனினும் இந்த வங்கிகளின் சொத்து மதிப்பு தரம் என்பது மூடிஸின் மதிப்பீட்டின் படி மாற்றம் செய்யப்படவில்லை” என்றார்.

வாராக்கடன் கணக்குகளில், பெரிய கணக்குகளின் அழுத்தமும், மறுஅமைப்பு செய்த கணக்குகளில் விடுபடல்களும் சேர்ந்து வாராக்கடன் விகிதம் அதிகரித்துள்ளது.

சொத்து தரமதிப்புகளுக்காக மூடிஸ் எடுத்துக் கொண்ட 11 பொதுத்துறை வங்கிகள் வருமாறு: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி, ஐடிபிஐ வங்கி, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஐஓபி., சிண்டிகேட் வங்கி, மற்றும் ஓரியண்டல் வணிக வங்கி ஆகியவையாகும்.

வங்கிகளின் சொத்து தரமதிப்பு நிலை நிலவரங்களின் படி, மூடீஸின் உத்தேசக் கணிப்புகள் கூறுவது என்னவெனில், இந்த 11 வங்கிகளுக்கான மூலதனத் தேவைப்பாடு மாற்றப்படாமல் 2016-2019 ஆம் ஆண்டுகளில் ரூ.1.45 லட்சம் கோடியாக உள்ளது.

இது அதிகரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என்கிறது மூடிஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x