Published : 18 Feb 2016 11:12 AM
Last Updated : 18 Feb 2016 11:12 AM

இவரைத் தெரியுமா?- விவேக் சாந்த் ஷேகல்

$ ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான மதர்சன் சுமி சிஸ்டத்தின் தலைவர் மற்றும் இணை நிறுவனர். 2012-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

$ மதர்சன் ஆட்டோ நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

$ ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2015 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 36-வது இடத்தை பிடித்துள்ளார்.

$ ஆட்டோமொபைல் துறையில் 40 வருட பணி அனுபவம் கொண்டவர்.

$ தற்போது இவருடைய மொத்த சொத்து மதிப்பு 14,371 கோடி ரூபாய்

$ 1975-ம் ஆண்டு ஆட்டோ உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான சம்வர்த்தனா மதர்சன் குழுமத்தை நிறுவியவர். தற்போது சம்வர்த்தனா மதர்சன் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருந்து வருகிறார்.

$ ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 2014-ம் ஆண்டு உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 659 வது இடத்தில் உள்ளார்.

$ டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x