Published : 17 Feb 2016 10:06 AM
Last Updated : 17 Feb 2016 10:06 AM

ஹகன் புஸ்கே - இவரைத் தெரியுமா?

$ ஸ்வீடனைச் சேர்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனமான சாப் (SAAB) நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2010-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

$ 2002-ம் ஆண்டிலிருந்து 2006-ம் ஆண்டு வரை ஸ்கென்கர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர். மேலும் இந்த நிறுவனத்தினுடைய நிர்வாக குழுவிலும் இருந்துள்ளார்.

$ ஸ்வீடன் ராணுவத்தில் ஆயுத தயாரிப்பு தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றியுள்ளார்.

$ தொலைத்தொடர்பு, மருத்துவம் போன்ற துறைகளில் இயங்கிவரும் நெபேப் ஏபி(Nefab AB) நிறுவனத்தின் இயக்குநராக 2015-ம் ஆண்டிலிருந்து இருந்து வருகிறார்.

$ 2006-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை மின்சார உற்பத்தி நிறுவனமான இஓஎன் நிறுவனத்தில் துணைத்தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

$ ஸ்வீடனில் உள்ள சேல்மர்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் இன்ஜினீயரிங் பிரிவில் இளநிலை பட்டமும் அறிவியல் பிரிவில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x