Published : 14 Feb 2016 12:59 PM
Last Updated : 14 Feb 2016 12:59 PM

மார்ச் 17-ம் தேதி கிங்ஃபிஷர் கட்டிடம் ஏலம்: அடிப்படை தொகை ரூ.150 கோடி

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மும்பையில் கையகப்படுத்தி வைத்திருந்த கிங்ஃபிஷர் ஏர் லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடம் ஏலத் துக்கு வர இருக்கிறது. இந்த கட்டிடத்தின் அடிப்படை ஏலத் தொகை ரூ. 150 கோடியாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏலம் வருகிற மார்ச் மாதம் 17-ம் தேதி நடைபெற இருக்கிறது.

கிங்ஃபிஷர் நிறுவனம் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளுக்கு ரூ. 6,963 கோடி கடன் நிலுவை தொகை வைத்துள்ளது. இதையடுத்து கடனை ஓரளவு மீட்கும் நடவடிக் கையில் எஸ்பிஐ வங்கி கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தை 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கையகப்படுத்தி யது. இதைத் தொடர்ந்து கட்டிடம் தற்போது ஏலத்திற்கு வர உள்ளது.

கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடம் 2401 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. நிதி சொத்துகளை பத்திரமயமாக்கல் மற்றும் புனரமைப்பு 2002 சட்டத் தின்படி இந்த ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலம் இணைய தளம் மூலம் நடத்தப்படுகிறது.

இந்த கட்டிடம் முக்கியமான இடத்தில் உள்ளது. மேலும் நான்கு தளங்களை கொண்டிருக்கிறது. விமான நிலையத்திற்கு அருகில் இருப்பதால் இந்தக் கட்டிடத்திற்கு உயர கட்டுப்பாடு உள்ளது என்று ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு எஸ்பிஐ வங்கிதான் மிக அதிக அளவாக ரூ.1600 கோடியை வழங்கியிருக்கிறது. எஸ்பிஐக்கு அடுத்தபடியாக ஐடிபிஐ வங்கி 800 கோடி ரூபாய் கடன் வழங்கி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x