Published : 01 Dec 2015 09:55 AM
Last Updated : 01 Dec 2015 09:55 AM

வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு அதிகரிப்பு

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வங்கித்துறை பங்குகளில் மேற்கொள்ளும் முதலீடுகள் அக்டோபர் மாதம் அதிகரித் துள்ளது. அக்டோபர் மாதம் ரூ.85,376 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இது 62,719 கோடியாக இருந்தது.

இது குறித்து கருத்து கூறியுள்ள வல்லுநர்கள்; பண்ட் மேலாளர்கள் வங்கி பங்குகளுக்கு ஒதுக்கும் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக தனியார் துறை வங்கிப் பங்குகளை அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர்.

தனியார் வங்கி பங்குகள்

பொதுத்துறை வங்கிகளை விட தனியார் துறை வங்கிகளின் வாராக்கடன் விகிதம் குறைவாக இருப்பதால் தனியார் வங்கி பங்குகள் மீது கவனம் செலுத்து கின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பங்குகளில் அதிகம் விரும்பும் பங்குகளாக வங்கிப் பங்குகள் உள்ளன. பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியின் புள்ளி விவரங்கள்படி இது தெரிய வந்துள்ளது.

மியூச்சுவல் பண்ட் சந்தை யின் மொத்த முதலீடுகளில் வங்கிப் பங்குகளின் முதலீடு அக்டோபர் மாதத்தில் 85,376 கோடி ரூபாயாக உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் ரூ.84,360 கோடி முதலீடு செய்யப்பட் டுள்ளது. இதற்கு முன்பு ஜூலை மாதத்தில் அதிக அளவாக ரூ.85,329 கோடி முதலீடு செய்யப்பட் டிருந்தது குறிப்பிடத் தக்கது. மொத்த முதலீடுகளில் வங்கித்துறை முதலீடு 20.67 சதவீதமாக உள்ளது. அதற்கு முந்தைய மாதம் 20.87 சதவீதமாக இருந்தது.

இந்த காலகட்டத்தில் பிஎஸ்இ பேங்க்ஸ் குறியீடு 0.47 சதவீதம் உயர்ந்துள்ளதும் கவனிக்கத்தக் கது. வங்கித்துறைக்கு அடுத்து ஐடி துறை பங்குகளில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஐடி துறையில் 41,817 கோடி ரூபாயும், பார்மா துறை பங்கு களில் 34,443 கோடி ரூபாயும், ஆட்டோ துறை பங்குகளில் ரூ.29,985 கோடியும், நிதிச் சேவை பங்குகளில் 23,944 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள் ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x