Last Updated : 23 Dec, 2015 09:12 AM

 

Published : 23 Dec 2015 09:12 AM
Last Updated : 23 Dec 2015 09:12 AM

தங்கம் இறக்குமதி: கடந்த ஆண்டைவிட 11% அதிகம்

நடப்பாண்டில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு 1,000 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 11 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஆண்டு 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை குறைந் துள்ளதால் இறக்குமதி செய்யப் படுவது அதிகரித்துள்ளதாக அகில இந்திய ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி சம்மேளனத்தின் தலைவர் ஜி.வி. ஸ்ரீதர் தெரி வித்துள்ளார். கள்ளக்கடத்தல் மூலமாக 100 டன் தங்கம் இந்தியாவுக்குள் வந்திருக் கலாம் என்றும் அவர் தெரிவித் துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலத்தில் 850 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இறக்குமதி ஆன தங்கத்தின் அளவு 650 டன்னாகும்.

கடந்த காலாண்டில் இறக் குமதி ஆன தங்கத்தின் அளவு 150 டன் முதல் 200 டன் அளவுக்கு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 300 டன் தங்கம் இறக்குமதி ஆனதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலத்தில் இந்தியா வில் தங்கத்தின் நுகர்வு குறையும் என உலக தங்கக் கவுன்சில் அறிக்கை தெரி விக்கிறது.

கிராமப்புற பொருளாதா ரத்தில் நிலவும் தேக்க நிலை மற்றும் 10 கிராம் தங்கத்தின் விலை தொடர்ந்து ரூ. 27 ஆயிரம் என்ற அளவில் விற்பனையானது ஆகிய காரணங்களால் 4-ஆம் காலாண்டில் இறக்குமதி குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் தங்கத்தின் நுகர்வு முந்தைய காலாண்டை விட அதிகமாக இருந்தது. பண்டிகைக் காலம் மற்றும் திருமண நாள்கள் ஆகியன காரணமாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இதன் காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் தங்கம் அதிக அளவில் வாங்கப் பட்டுள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது.

பெட்ரோலியம் உள்ளிட்ட பொருள்களுக்கு அடுத்தபடி யாக அதிக அளவில் இறக்குமதி யாவது தங்கம்தான். நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்புக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x