Last Updated : 24 Dec, 2015 10:22 AM

 

Published : 24 Dec 2015 10:22 AM
Last Updated : 24 Dec 2015 10:22 AM

கால் டிராப்’ பிரச்சினையை தீர்க்க புதிய செல்போன் கோபுரங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

தொலைபேசி அழைப்புகள் இடை யில் துண்டிக்கப்படும் (கால் டிராப்) பிரச்சினைக்கு தீர்வு காண 29,000 புதிய தொலைபேசி கோபுரங்களை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நாடு முழுவதும் அமைத்துள்ளனர் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச் சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கு தீர்வு காண வேண்டும் என மத்திய அரசின் வலியுறுத்தலுக்கு பிறகு இது நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களிடம் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் பேசியது. தொலைபேசி சேவை இடையில் துண்டிக்கப்படுவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத் தபட்டது என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் குறிப்பிட்டார்.

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் நாடு முழுவதும் 29,000 புதிய செல்போன் தொலைதொடர்பு கோபுரங்களை அமைத்துள்ளனர். குறிப்பாக தலைநகர் டெல்லியில் மட்டும் 2,200 கோபுரங்கள் அமைக்கபட்டுள்ளன.

பொதுதுறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் 4,500 செல்போன் கோபுரங்களை நாடு முழுவதும் நிறுவியுள்ளது. எம்டிஎன்எல் 28 கோபுரங்களை நிறுவியுள்ளதாக நேற்றைய கேள்வி நேரத்தில் குறிப்பிட்டார்.

தொலைபேசி சேவை இடையில் துண்டிக்கப்படும் சூழ்நிலை குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண் காணித்து வருவதாகவும், இதை சரிசெய்வதற்கான நடவடிக்கை களை மேம்படுத்த தொலை தொடர்பு நிறுவனங்களோடு தொடர்ந்து பேசி வருவதாகவும் குறிப்பிட்டார். தொலைத் தொடர்பு அமைச்சகம் மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இரண்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றார்.

இந்த குறைபாடுகளை களைய நடவடிக்கைகள் எடுக்குமாறு தொலைதொடர்பு நிறுவனங்களை கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் நட வடிக்கைகள் மேற்கொண்டுள் ளனர். இதை தொடர்ந்து கண் காணிப்போம் என்றும் குறிப்பிட்டார்.

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய சட்ட பிரிவு 29-ன் கீழ், டிராய் நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் சட்டம் வகை செய்கிறது. மேலும் இது உரிமை மீறல் சார்ந்ததாகும். இதற்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் மற்றும் தண்டனை விதிக்கவும் டிராய் அதிகாரம் கொண்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடரும் பட்சத்தில் குற்றமாக கருதப்படும். தினசரி இந்த பிரச்சினை தொடர்ந் தால் இதற்கு கூடுதலாக 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கிராமப்புற இணைப்பு

55,669 கிராமங்களுக்கு தற்போதுவரை செல்போன் சேவை சென்றடையவில்லை என்று மக்களவையில் ரவிசங்கர் பிரசாத் கூறினர். நாட்டில் உள்ள 5,97,608 கிராமங்களில் தற்போது 5,41,939 கிராமங்கள் செல்போன் சேவைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள 55,669 கிராமங்களுக்கு இன்னும் செல்போன் சேவை செல்லவில்லை என்றார். அதாவது 9.31 சதவீத கிராமங்களுக்கு செல்போன் சேவை செல்லவில்லை என்று குறிப்பிட்டார்.

அனைவருக்கும் தொலை தொடர்பு சேவையை கொண்டு செல்வதில் அரசு முனைப்போடு உள்ளது. கிராமப்புற தொலை தொடர்பு நெருக்கம் அதிகரித்துள் ளது. அதே சமயத்தில் கிராமப்புற மற்றும் நகர்புற நெருக்கத்தின் அடிப்படையில் விளக்குகிறபோது, நுகர்வு சக்தியில் வித்தியாசம் நிலவுகிறது என்றார்.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கபட்டுள்ள மாநிலங்களில் 2,199 செல்போன் கோபுரங்களை அமைக்க ரூ.3,567.58 கோடிக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x