Published : 18 Dec 2015 10:07 AM
Last Updated : 18 Dec 2015 10:07 AM

இவரைத் தெரியுமா?- யுடாகா சைடோ

ஜப்பானைச் சேர்ந்த ஹிட்டாச்சி தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

மேலும் இந்த நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குழுவின் தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.

1979-ம் ஆண்டு ஹிட்டாச்சி குழுமத்தில் பணிக்குச் சேர்ந்த இவர் பல்வேறு பிரிவுகளில் பொறுப்புகளை வகித்தவர்.

டோஸ் (TOSE) நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர். நிகார் மெடிக்கல்-பிஸிக்ஸ் நிறுவனத்தின் பட்டய கணக்காளராக இருந்தவர்.

ஹிட்டாச்சி டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்ஸ், ஹிட்டாச்சி கொக்சாய் எலெக்ட்ரிக்கல் நிறுவனங்களின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

டோக்கியோ பல்கலைகழகத்தில் இளங்கலை பட்ட படிப்பை முடித்துள்ளார்.

ஒட்டுமொத்த சமூகத்தின் மதிப்பீடுகளை தொழில்நுட்பம் சிறப்பான முறையில் மாற்றிவருகிறது என்று கூறுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x