

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், உயரதிகாரிகளின் சம்பளத்தைக் குறைத்து, செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி அறிவுறுத்தி யுள்ளது. தவிர கடந்த காலங்களில் உயரதிகாரிகள் வாங்கிய சம்பளத்தையும் நிறுவனங்கள் வெளியிட வேண்டும் என்றும் செபி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கத்தின் (ஆம்பி) அடுத்த இயக்குநர் குழுவில் இது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மியூச்சுவல் பண்ட் நிறுவ னங்களின் செலவுகளை பொறுத்தவரை நிறுவனத்தின் உயரதிகாரிகளின் சம்பளம் மற்றும் விநியோகஸ்தர்களின் கமிஷன் ஆகியவை பெரும் செலவுகள் ஆகும். நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, தலைமை முதலீட்டு அதிகாரி, விற்பனை பிரிவு தலைவர், செயல்பாட்டு அலுவலர் ஆகியோர் அதிக சம்பளம் பெருகின்றனர்.
ஒரு முக்கிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெருகிறார். சராசரியாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளின் ஆண்டு சம்பளம் ரூ.1 கோடி முதல் 1.50 கோடி ரூபாயாக இருக் கிறது.
உயரதிகாரிகளுக்கு அதிக சம்பளம் கொடுப்பது நிறுவ னத்துக்கு கடினமாக இருக்கும், குறிப்பாக சிறிய நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்படும். இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் செபியின் மியூச்சுவல் பண்ட் ஆலோசனை குழுவில் விவாதிக் கப்பட்டது.
வரும் 24-ம் தேதி நடக்க இருக்கும் ஆம்பியின் இயக்குநர் குழுவில் இது குறித்து விவாதிக் கப்பட உள்ளது.
உயரதிகாரிகளின் சம்பளத்தை குறைப்பது பற்றி எங்களுக்கு கடிதம் வந்திருக்கிறது என்று மியூச்சுவல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தி இருக்கிறார்.
தற்போதைய விதிமுறைகளின் படி மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தங்கள் உயரதிகாரிகளின் சம்ப ளத்தை தாங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம்.
செபி வகுத்துள்ள மொத்த செலவு விகிதத்தில்தான் (டிஇஆர்) உயரதிகாரிகளின் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பது மியூச்சுவல் பண்ட் நிறுவ னங்களின் வாதமாக இருக்கிறது.
அதேபோல உயரதிகாரிகளின் சம்பளத்தை செபி நிர்ணயம் செய்யும் போது, சிறிய மியூச் சுவல் பண்ட் நிறுவனங்கள் பாதிப்படைவார்கள் என்பது இந்த துறை வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.