Published : 25 Nov 2015 09:46 AM
Last Updated : 25 Nov 2015 09:46 AM

சிங்கப்பூர் நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு

சிங்கப்பூரைச் சேர்ந்த கிரயான் டேட்டா நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார். எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார் என்கிற தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதுவரை 10க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் டாடா தனிப்பட்ட வகையில் முதலீடுகள் செய்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரைச் சேர்ந்த வென்ச்சர் கேபிடல் நிறுவனமான ஜங்கிள் வென்ச்சர் நிறுவனத்தில் முதன்மை ஆலோசகராக சேர்ந் தார். இந்த நிறுவனமும் கிரயான் டேட்டா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

இது குறித்து கிரயான் டேட்டா நிறுவனத்தின் இணை நிறுவனரான காந்த் சாஸ்திரி குறிப்பிடும்போது இது எங்களுக்கு மிகப் பெரிய உற்சாகம் தரக்கூடிய கவுரவமாகக் கருதுகிறோம். எங்களது இலக்கின் மதிப்பை ஊக்கப்படுத்தி அவர் விருது கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

இந்த நிறுவனம் 2012ல் கொல்கத்தா ஐஐஎம் மாணவர் களான சாஸ்திரி மற்றும் சுரேஷ் சங்கர் ஆகியோரை இணை நிறுவனர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது. ஜங்கிள் வென்ச்சர் கேபிடல் மற்றும் ஸ்பிரிங் சீட்ஸ் நிறுவனங்களிலிருந்து 100 கோடி டாலரை முதலீடாக திரட்டியது. இந்த நிறுவனத்தின் 100 பணியாளர்கள் நியூயார்க், துபாய், சென்னை, சிங்கப்பூர், மற்றும் லண்டன் என பல நகரங் களில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.

டாடா குழுமத்தின் பொறுப்பு களிலிருந்து விலகிய பிறகு ரத்தன் டாடா பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் தனிப்பட்ட முதலீகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஓலா, கார்டிகோ, பேடிஎம், லைபரேட், கார்யா போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளார். மேலும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களான கலரி கேபிடல், ஐடிஜி வென்ச்சர் போன்ற நிறுவனங்களில் ஆலோ சகராகவும் உள்ளார். கலரி கேபிடல் அர்பன்லேடர், ஸ்நாப்டீல், யுவர்ஸ்டோரி நிறுவ னங்களில் முதலீடு செய்துள்ளது.

கிரயான் நிறுவனத்தின் செயல்பாடுகளை நாங்கள் முழுவதுமாக நம்புகிறோம். இணை நிறுவனர்கள் சாஸ்திரி மற்றும் சுரேஷ் இருவரும் சந்தை மற்றும் பகுப்பாய்வு அனுபவங்கள் கொண்டவர்கள். மேலும் நிறுவனத்தின் இலக்கை தெளிவாக திட்டமிட்டுள்ளனர் என்றும் ஜங்கிள் வென்ச்சர் நிறுவனத்தின் அனுராக் வத்ஸா குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x