Published : 25 Nov 2015 09:33 AM
Last Updated : 25 Nov 2015 09:33 AM

300 கிளைகளை தொடங்க மைடிவிஎஸ் திட்டம்

கார் சர்வீஸ் நிறுவனமான மைடிவிஎஸ் தமிழ்நாட்டில் புதிதாக 300 கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய கிளைகள் அனைத்தும் பிரான்சைசிகளாக இருக்கும் என்றும் 2016 இறுதிக்குள் இந்தக் கிளைகள் தொடங்கப்படும் என்றும் மைடிவிஎஸ் கூறியுள்ளது

இது குறித்து டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல் யூஷன்ஸ் இயக்குநர் என்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “வாரண்டி காலம் முடிந்த கார்களுக்கான சேவை வழங்குவதில் சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் எங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இதன் முதற்கட்டமாக தமிழகத்தில் கார் சர்வீஸ் உரிமையாளர்களை பிரான்சைசிகளாக இணைக்க திட்டமிட்டுள்ளோம். இதை மற்ற மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறோம்” என்று கூறினார்.

பிரான்சைசிகளாக இணை பவர்களுக்கு வர்த்தகத்தை விரிவுபடுத்த மைடிவிஎஸ் நிறுவனம் உதவி புரியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைடிவிஎஸ் தற்போது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயங்கி வருகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x