Last Updated : 24 Nov, 2015 10:29 AM

 

Published : 24 Nov 2015 10:29 AM
Last Updated : 24 Nov 2015 10:29 AM

வாராக் கடனை திரும்பப் பெற வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரம்: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வங்கிகளில் கடன் பெற்று அதை திரும்பி செலுத்துவதற்கு போதிய நிதி ஆதாரம் இருந்தும் வேண்டுமென்றே சில நிறுவனங் கள் மற்றும் தனி நபர்கள் செலுத்தாமல் (wilful defaulters) உள்ளனர். இத்தகை யோரிடமிருந்து கடனைத் திரும்பப் பெறுவதற்கு வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.

டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பொதுத்துறை வங்கித் தலைவர்களுடனான ஆலோசனை நேற்று நடைபெற்றது. வங்கிகளின் இரண்டாம் காலாண்டு செயல்பாடு குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. வங்கிகளில் அதிகரித்து வரும் வாராக்கடன் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

பொதுத்துறை வங்கிகளின் நிகர வாராக்கடன் அளவு 6.03 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச்சில் இது 5.20 சதவீதமாக இருந்தது.

மத்திய அரசின் பல்வேறு துறை களைச் சேர்ந்த செயலர்களும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற் றனர். ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்கும் தேவைப்படும் நிதி அளவு குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் சில குறிப்பிட்ட துறைகளிலிருந்து வாராக் கடன் அளவு அதிகமாக இருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. சில குறிப்பிட்ட துறையினர் பொது வாகவும் பரவலாகவும் அனைத்து வங்கிகளிலும் கடன் பெற்றிருப் பதும், அத்துறையினர்தான் வங்கி களின் வாராக் கடன் அதிகரிப்புக்குக் காரணமாக உள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு விவாதிக் கப்பட்டது.

வங்கிகள் அனைத்தும் வாராக் கடனை வசூலிப்பதில் உறுதியோடு இருக்க வேண்டும் என்றும், வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாதவர்கள், நிறுவனங்கள் விஷயத்தில் வங்கிகள் சுதந்திரமாக செயல்பட்டு கடனை வசூலிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என்றும் ஜேட்லி குறிப்பிட்டார். தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங் பிஷர் நிறுவனம் பெற்றுள்ள ரூ. 7 ஆயிரம் கோடி கடன் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கி இதுபோன்ற கடனை திருப்பிச் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று ஜேட்லி வலியுறுத்தினார்.

வங்கிகளுக்கு சுதந்திரமான அதிகாரம் அளிக்கப்படும்போது தான் அவற்றின் கடன் சுமையைக் குறைக்க முடியும், வங்கிச் சேவையும் மேம்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் விலை வீழ்ச்சி காரணமாக உருக்கு, அலுமினியத் துறை சார்ந்த தொழில்கள் பாதிக் கப்பட்டுள்ளதால், இத்துறை நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை எவ்விதம் வசூலிப்பது என்ற கேள்வி எழுந் தது. இதற்கு பதிலளித்த ஜேட்லி, நிதிச் சேவை பிரிவுச் செயலர் இது தொடர்பாக அனைத்து துறை களுடனும் ஆலோசனை நடத்தி ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வங்கிக்கு அளிப்பார் என்றார். வங்கிகள், வருவாய்த்துறை உள்ளிட்டவற்றுடன் பேச்சு நடத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

குறிப்பிட்ட துறைகளால் வங்கி களுக்கு ஏற்பட்டுள்ள கடன் நெருக் கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், துறைகள் செயல்படும்போதுதான் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றார்.

வங்கிகளின் நிதிவளம் மிகவும் முக்கியமான பிரச்சினையாகும். கடந்த கால பிரச்சினைகளின் தாக்கம் நிகழ்காலத்தில் ஏற்படுகி றது. அதிலும் குறிப்பாக வங்கிகள் எதிர்கொண்டுள்ள வாராக் கடன் பிரச்சினை ஏற்றுக் கொள்ள முடியா தது என்று ஜேட்லி குறிப்பிட்டார்.

வங்கிகள் தாங்கள் வழங்கிய ஒவ்வொரு கடன் நிறுவனங்கள் பற்றிய விவரத்தை ஆராய்ந்து, அவர்கள் வேண்டுமென்றே கடனைத் திருப்பித் தராமல் இழுத்தடித்தால் அந்நிறுவனங்கள் அல்லது அத்தகைய தனி நபர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

இப்பொழுது பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் திரும்பி யுள்ளது. இதனால் கடந்த காலத்தின் சுமை வங்கிகளுக்கு இனியும் தொடராது. ஓரளவுக்கு சில துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கடன் தொகையைத் திரும்பி செலுத்திவிடும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

வங்கிக் கணக்கில் நேரடியாக மானிய உதவியை அளிப்பதில் 12 கோடி மக்கள் சிலிண்டருக்கான மானிய தொகையைப் பெற்றுள் ளனர். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 9 கோடி பேருக் கான ஊதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட் டார். வங்கிகளின் நிதி வளத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக் கப்பட்ட இந்திரதனுஷ் எனும் திட்டத்தின்கீழ் முதல் தவணையாக வங்கிகளுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு அளிப்பது, வீடு கட்டு வதற்கான கடனுதவி மற்றும் நகர்ப் புற வறுமை ஒழிப்புத் திட்டங்கள், கல்விக் கடன், உணவு பதனீட்டுத் தொழிலுக்கு கடனுதவி, ஜவுளித் துறை வளர்ச்சி குறித்தும் இக்கூட் டத்தில் விவாதிக்கப்பட்டது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x