Published : 25 Nov 2015 09:51 AM
Last Updated : 25 Nov 2015 09:51 AM

15 சதவீத ஆன்லைன் பேஷன் சந்தை: ஆதித்யா பிர்லா குழுமம் இலக்கு

ஆன்லைன் பேஷன் சந்தையில் 15 சதவீத இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளதாக ஆதித்யா பிர்லா குழுமம் தெரிவித்துள்ளது. இந்த குழுமத்தின் அபாஃப் டாட் காம் (abof.com) மூலம் இந்த இலக்கை 2020 ஆம் நிதி ஆண்டுக்குள் எட்ட திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நேற்று பேசிய அபாஃப் டாட் காம் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பிரசாந்த் குப்தா ஆன்லைன் பேஷன் சந்தையில் 2019-20 நிதியாண்டுக்குள் இந்த இலக்கு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாகவும், ஆன்லைன் சந்தை மூலம் 1-1.5 கோடி டாலர் இலக்கு எட்ட திட்டமிட்டுள் ளதாகவும் குறிப்பிட்டார். ஆன்லைன் பேஷன் சந்தையில் பில்லியன் டாலர் வாய்ப்புகள் எங்களுக்கு உள்ளது என்றவர், நிறுவனத்தின் இலக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் எட்டு வோம் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டார்.

எங்களது போட்டியாளர்களாக இருக்கும் நிறுவனங்கள், பல்வேறு பிராண்டுகளுக்கும் ஆபர்கள் வழங்குவதில்லை என்றும் கூறி னார். தற்போது 55 பிராண்டுகள் விற்பனை செய்து வருகிறோம். அடுத்த ஆறு மாதங்களில் இந்த எண்ணிக்கை 125 பிராண்டுகளாக உயரும். எங்களது வாடிக்கை யாளர்களுக்கு உண்மையில் பயன்படக்கூடிய பிராண்டுகளை மட்டும் விற்பனை செய்ய உள்ளோம் என்றார். ஆதித்யா பிர்லா குழுமம் அக்டோபர் 16 ஆம் தேதி இந்த இணையதளத்தை அறிமுகம் செய்தது.

இந்த இணையதளத்தில் ஆடை களை வாங்குவதற்கு முன்பு 3டி தொழில்நுட்பத்தில் காணொளி (Virtually) வகையில் ஆடைகளை சோதித்து பார்க்கும் வசதி நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஆதித்யா பிர்லா குழுமம் ஏற்கெனவே தனது மதுரா பேஷன் மற்றும் பாண்டலூன் மூலமாக டிரண்டின் டாட் காம் என்கிற இணையதளத்தை வைத்துள்ளது. இது ஜபாங் மற்றும் மந்த்ரா போன்ற இணையதள பேஷன் நிறுவனங்களுக்கு போட்டி யாக உள்ளது.

இந்த போட்டிகள் குறித்து பேசிய குப்தா தள்ளுபடி விளையாட் டுகளை நாங்கள் வழங்குவதில்லை என்றார்.

எங்களது போட்டியாளர்கள் அதிக தள்ளுபடிகளை வழங் கலாம். ஆனால் எங்களிடம் காட்சிபடுத்தப்பட்டுள்ளவை யாவும் வாடிக்கையாளர் அனுபவத் திலிருந்து பெறப்பட்டவை என்றார். தரமான, உயர்தர பேஷன் தயாரிப்புகளை மட்டுமே வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

இ-டெயில் மார்கெட் 2020 ஆம் ஆண்டுக்குள் சுமார் 10 மடங்கு வளர்ச்சியை சந்திக்கும் என்று தொழில்துறை அமைப்பான ஐஏஎம்ஏஐ ஏற்கெனவே தெரி வித்துள்ளது முக்கியமானது. இந்த காலகட்டத்தில் சுமார் 500 கோடி டாலர் வரை இ-டெயில் துறையின் வளர்ச்சி இருக்கும் என்றும் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x