Published : 04 Feb 2021 09:27 AM
Last Updated : 04 Feb 2021 09:27 AM

தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட பணியாளர் விகிதம் 51.4 சதவீதம்

தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட வருடாந்திர தொழிலாளர் ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான பணியாளர் மக்கள் தொகை விகிதம் 51.4 ஆக தமிழ்நாட்டில் உள்ளது.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு சந்தோஷ்குமார் கங்க்வார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த வருடாந்திர தொழிலாளர் ஆய்வு தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் 2017-ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ஆம் ஆண்டுக்கான ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.8 சதவீதமாகும். இந்த அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://www.mospi.nic.in/) காணலாம்.

கோவிட் பெருந்தொற்றின் காரணமாக அதிக அளவிலான இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்காக தற்சார்பு இந்தியா திட்டத்தை அரசு அறிவித்தது.

பிரதமரின் ஏழைகள் நல திட்டத்தின் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்களின் பங்கு மற்றும் நிறுவனங்களின் பங்கு ஆகிய இரண்டையுமே 2020 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அரசு செலுத்தியது. தகுதி உள்ள 38.82 லட்சம் தொழிலாளர்களின் கணக்குகளில் ரூபாய் Rs 2567.66 கோடி செலுத்தப்பட்டது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட வருடாந்திர தொழிலாளர் ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான பணியாளர் மக்கள் தொகை விகிதம் 51.4 ஆக தமிழ்நாட்டில் உள்ளது.

இதற்கிடையே, தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் உறுப்பினர்களின் பணிக்கு ஆபத்து ஏற்படும் போது அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக அடல் பீமித் வியாக்தி கல்யாண் யோஜனா என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தற்போது இன்னும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு பணியாளரை பணியை விட்டு அனுப்புவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை தொழிலாளர் அரசு காப்பீட்டு கட்டணத்தை நிறுவனங்கள் செலுத்தவில்லை என்றாலும், அந்த காலத்திற்கான காப்பீடும் பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தின்படி உறுப்பினர்களின் ஊதியத்தில் சராசரியாக 50 சதவீத தொகை 90 நாட்களுக்கு அவர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x