Published : 11 Oct 2015 12:11 PM
Last Updated : 11 Oct 2015 12:11 PM

ஸ்டான் சார்ட் வங்கி 1000 ஊழியர்களை நீக்க திட்டம்

இந்தியாவில் அதிக கிளைகளை கொண்ட வெளிநாட்டு வங்கியான ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி மூத்த ஊழியர்களை வேலையி லிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்ற பில் விண்டர்ஸ், வங்கியின் செலவுகளை குறைக்க இந்த நடவடிக்கையை மேற் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊழியர்களுக்கு அவர் அனுப் பியுள்ள மெமோ மூலம் தற்போது ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்கக் கூடும் என்று தெரிகிறது. இதில் 25 சதவீதம் மூத்த ஊழியர் கள் எனவும் கூறப்படுகிறது. “நமது நிறுவனம் தற்போது தீர்க்கமான மற்றும் உடனடி நடவடிக்கைகளை எதிர் நோக்கியுள்ளது” என்று விண்டர்ஸ் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

நான் பதவியேற்கும் முன்பே ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கும் நடவடிக்கை இருந்ததாக பில் விண்டர்ஸ் தெரிவித்து உள்ளார். 2005-ஆம் ஆண்டு 44,000 ஆயிரம் ஊழியர்களை கொண்ட இந்த வங்கியில், ஊழியர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து தற்போது 88,000 ஆயிரம் ஊழியர்களாக உள்ளனர்.

பில் விண்டர்ஸ் அனுப்பியுள்ள இந்த மெமோ மூலம், “நாங்கள் எதை நோக்கி செல்லவேண்டும், எங்கள் செயல்பாட்டில் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்” என்பவையெல்லாம் தெளிவாக உள்ளதாக ஸ்டாண்டர்ட் சார்டர்ட் செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x