Published : 16 Dec 2020 09:07 AM
Last Updated : 16 Dec 2020 09:07 AM

உணவு பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கும் இந்திய தர கவுன்சில் சான்றிதழ்

நாட்டில் சுகாதார மதிப்பீட்டை அதிகரிப்பதற்காக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் உத்தரவின் பேரில், சுகாதார மதிப்பீடு தணிக்கை முகமைகளை அங்கீகரிக்கும் திட்டத்தை இந்திய தர கவுன்சில் தொடங்கியுள்ளது.

இதன் விவரங்கள் இந்திய தரக்கவுன்சில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு உணவு பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு சான்றிதழ் அளிக்கும் முறைதான், உணவு சுகாதார மதிப்பீடு திட்டம். தணிக்கையின் போது உணவு பொருட்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலவரப்படி, உணவு நிறுவனங்கள் தர மதிப்பீடு செய்யப்படுகின்றன.

சுகாதார மதிப்பீடு ‘ஸ்மைலி’ (சிரிப்பு அடையாளம்) வடிவில் 1 முதல் 5 வரை வழங்குப்படும். இந்த சான்றிதழ்கள் வாடிக்கையாளர் பார்க்கும் வகையில் முக்கியமான இடத்தில் வெளியிட வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மதிப்பீடு தணிக்கை முகமைகள், உணவு பொருட்களை, பசாய் வகுத்த விதிமுறைகளுக்கு ஏற்ப, உணவு பொருட்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை ஆய்வு செய்து சுகாதார மதிப்பீடுகளை வழங்கும்.

தற்போது, இந்த திட்டம், உணவு சேவைகள் அளிக்கும் உணவு விடுதிகள், தாபாக்கள், இனிப்பு கடைகள், பேக்கரிகள், மாமிச சில்லரை விற்பனை கடைகள் ஆகியவற்றுக்கு பொருந்தும்.

இதுகுறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி திருஅருண் சிங்கால் கூறுகையில், ‘‘நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உணவு பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் சுய இணக்க கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் சுகாதார மதிப்பீடு திட்டம் முக்கிய கருவியாக இருக்கும். இது உணவு விநியோகத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு, தேவையையும் அதிகரிக்கும். உணவு பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும், தங்கள் வளாகத்தில் சுகாதார மதிப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x