Published : 20 Oct 2015 10:37 AM
Last Updated : 20 Oct 2015 10:37 AM

இவரைத் தெரியுமா?- அமித் கோசைன்

எலிவேட்டர் மற்றும் எஸ்கலேட்டர் தயாரிப்பு நிறுவனமான கோனே இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். கடந்த செப்டம்பர் மாதம் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டர்.

இதற்கு முன்பு ஆசிய பசிபிக் நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான செயற்குழுவில் செயல் துணைத் தலைவராக இருந்தார்.

ஜேசிபி இந்தியா நிறுவனத்தில் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டவர். இந்த நிறுவனத்தில் செயல் துணைத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் என முக்கிய தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியவர்.

இந்திய கட்டுமான கருவிகள் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்த அனுபவம் கொண்டவர்.

விற்பனை, சந்தை, தொழில் மேம்பாடு, உற்பத்தி மேலாண்மை மற்றும் நிறுவன விவகாரம் போன்ற துறைகளில் வல்லுனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் அனுபவம் கொண்டவர்.

அகமதாபாத் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை பட்டம் பெற்றவர்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) இந்திய திடக்கழிவு மேலாண்மை குழுவின் தலைவராக உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x