Published : 12 Nov 2020 01:36 PM
Last Updated : 12 Nov 2020 01:36 PM

சுங்கத்துறை பறிமுதல் செய்த பழங்கால தொல்பொருட்கள், நாணயங்கள் ஒப்படைப்பு

சுங்கத்துறை பறிமுதல் செய்த பண்டைய, இடைக்கால தொல்பொருட்கள், நாணயங்களை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலத் சிங் படேலிடம், இன்று ஒப்படைத்தார்.

கிமு 1206 முதல் கி.பி 1720 வரையிலான சுல்தான் மற்றும் முகலாயர் காலம் மற்றும் கிபி 1800 முதல் கி.பி 1900 வரையிலான குஷானர், யாதேயர், குப்தர், பிரதிகர், சோழர், ராஜ்புதனர், முகலாயர், மராத்தியர், காஷ்மீர் ராஜ்ஜியங்கள், பிரிட்டிஷ் இந்தியா, பிரெஞ்சு மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 40,282 நாணயங்கள், 18 பழங்கால முத்திரைகள்/ ஆட்சியாளர்கள் அணியக்கூடிய மத சின்னம், மன்னர் குடும்பத்தைச் சேர்நத பெண்கள் அணியும் வெள்ளி ஒட்டியாணம் ஆகியவற்றை சுங்கத்துறை பறிமுதல் செய்து வைத்திருந்தது.

இந்தப் பொருட்கள் சிலவற்றை வெளிநாட்டினர் இருவர் கடந்த 1994ம் ஆண்டு டெல்லியிருந்து ஹாங்காங்குக்கு கடத்திச் செல்ல முயன்றபோது, சுங்கத்துறை பிடித்து பறிமுதல் செய்தது. இதைத் தொடர்ந்து டெல்லியில் ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் தங்கக் காசுகள் உட்பட பழங்காலப் பொருட்கள் பல கைப்பற்றப்பட்டன.

இந்தப் பொருட்களை மதிப்பிடும்படி இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையிடம் சுங்கத்துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன்படி நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையில், பறிமுதல் செய்யப்பட்ட 40,301 பழங்காலப் பொருட்களின் மதிப்பு ரூ.63.90 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேரடிகள் வரி மற்றும் சுங்கத்துறை சட்டத்தின் படி பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் பொருட்களை, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினரிடம், சுங்கத்துறை ஒப்படைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x