Last Updated : 01 Sep, 2015 10:15 AM

 

Published : 01 Sep 2015 10:15 AM
Last Updated : 01 Sep 2015 10:15 AM

ஆர்பிஐ வட்டியைக் குறைப்பதற்கான காரணங்கள் அதிகரித்துள்ளன: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை

ரிசர்வ் வங்கி எதிர்வரும் நிதிக் கொள்கை அறிவிப்பில் கடனுக் கான வட்டியை நிச்சயம் குறைக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்தார். நாட்டின் பணவீக்கம் தற்போது கட்டுக்குள் உள்ளது. அதேபோல பொருள் களின் விலையும் உயரவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இது போன்ற பல காரணங்களால் வட்டிக் குறைப்பை ஆர்பிஐ நிச்சயம் மேற்கொள்ளும் என நம்புவதாக அவர் கூறினார்.

பொதுவாக பார்க்கும்போது பணவீக்கம் கட்டுக்குள்ளேயே இருக்கிறது. மேலும் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக் குறைக்கு சவாலாக விளங்கும் கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருவது சாதகமான அம்சமாகும். மேலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் வேளாண் உற்பத்தி இந்த ஆண்டு சிறப்பாகவே இருக்கும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில் உணவுப் பொருள்களின் விலை உயராது என்றே தோன்று கிறது என்று அவர் சுட்டிக் காட்டி னார்.

இதுபோன்ற சாதகமான சூழல் நிலவும்போது கடனுக்கான வட்டியை ஆர்பிஐ குறைக்க வேண்டும். இருப்பினும் இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் ரிசர்வ் வங்கி க்கு உள்ளது என்று அவர் குறிப் பிட்டார். மேலும் ரிசர்வ் வங்கி நிர்வாகமானது மிகவும் தொழில் முறையில் நிர்வகிக்கப்படும் அமைப்பாகும். அந்த வகையில் பார்த்தாலும் ரிசர்வ் வங்கியும் இத்தகைய விஷயங்களை தனது அடுத்த நிதிக் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக கருத் தில் கொள்ளும் என்று நிச்சயம் நம்பலாம் என்றார் ஜேட்லி.

வட்டிக் குறைப்பு விஷயத்தில் ரிசர்வ் வங்கி மிகவும் கடுமையாக அல்லது பிடிவாதமாக நடந்து கொள்வதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஜேட்லியிடம் கேட்டதற்கு, ``மக்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரி இருக்கலாம். ஆனால் நிர்வாகத் திறன் மிக்க நிபுணர்களைக் கொண்டுள்ள ரிசர்வ் வங்கியின் அணுகுமுறை வேறு மாதிரி இருக்கலாம். ஆனாலும் இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு மட்டும்தான் உண்டு. அந்த அமைப்பின் மீது நம்பிக்கை வைப்பது மிகவும் அவசியம். எதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதற்கு அவர்களது வாதமும் நியாயமானதாகவே இருக்கும். இதை பொதுமக்களும் உணர வேண்டும் என்றார்.

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் சரிந்து வருவது இந்தியாவுக்கு மிகவும் சாதகமான அம்சமாகும். ஏனெனில் எரிபொருள் தேவையை பெருமளவு இறக்குமதி மூலமே இந்தியா பூர்த்தி செய்து கொள்ள வேண்டியுள்ளது என்று ஜேட்லி குறிப்பிட்டார்.

சீனாவில் ஏற்பட்டுள்ள சரிவு இந்தியாவைப் பாதிக்காது என்று குறிப்பிட்ட ஜேட்லி, உள்நாட் டிலேயே நமது தயாரிப்புகளுக்கு தேவையும், மிகப் பெரிய சந்தை வாய்ப்பும் உள்ளது என்றார்.

பிற நாடுகளில் போட்டுள்ள முதலீடுகளை திரும்பப் பெற்று இந்தியாவில் முதலீடு செய்வ தற்கான வாய்ப்புகளை மத்திய அரசு பிரகாசப்படுத்தியுள்ளது என்றார். சீர்திருத்தம் தொடர் பாகப் பேசிய ஜேட்லி, சரக்கு சேவை வரி தொடர்பான மசோதா நிறைவேறினால், அடுத்த கட்டம் மிகவும் எளிமைப்படுத் தப்பட்டதாக நிலச் சீர்திருத்த மசோதா கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடையும் என்றார்.

பின்னடைவு அல்ல

நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்த அவசர சட்டம் பிறப்பிக்காதது அரசுக்கு பின்னடைவு அல்ல என்று ஜேட்லி குறிப்பிட்டார்.

குடியரசுத் தலைவர் பிறப்பித்திருந்த அவசர சட்டம் காலாவதியாகும் நிலையில் அதை புதுப்பிக்க அரசு முயலவில்லை. இதற்கு மாற்றாக நீக்கு போக்கு தன்மையுடன் கூடிய மாற்று வழியை பின்பற்றும் என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்த மோடி நேற்று முன்தினம் பேசுகையில், நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மீண்டும் கொண்டு வர அரசு முயலாது என்று குறிப்பிட்டார். ஏற்கெனவே குடியரசுத் தலைவர் பிறப்பித்த அவசர சட்டம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் காலாவதியாகிறது. மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள இந்த மசோதாவில் தேவைக்கேற்ப திருத்தங்கள் செய்ய அரசு தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். இது நிச்சயம் பின்னடைவு அல்ல. இந்த மசோதாவால் அரசியல் ரீதியில் முடக்கம் ஏற்படுவதற்கு பதிலாக மாற்று யோசனை மூலம் இதைக் கையாள முடிவு செய்துள்ளோம். அந்த வகையில் இது முன்னேற்றமே என்றார்.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது குறித்து கேட்டதற்கு, இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினருடன் தான் பேச்சு நடத்தி வருவதாக கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x