Last Updated : 02 Sep, 2015 09:53 AM

 

Published : 02 Sep 2015 09:53 AM
Last Updated : 02 Sep 2015 09:53 AM

துபாய் தாஜ் பேலஸில் இருந்து வெளியேறுகிறது டாடா குழுமம்

டாடா குழுமத்தைச் சேர்ந்த தாஜ் ஹோட்டல்ஸ் நிறுவனம் துயாயில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலின் நிர்வாகத்திலிருந்து வெளியேறு வதாக அறிவித்துள்ளது. 14 ஆண்டுகள் செயல்பாடுகளுக்கு பிறகு வெளியேறியுள்ளதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

துபாயின் டெய்ரா எனுமிடத்தில் 2001 ஆம் ஆண்டிலிருந்து தாஜ் பேலஸ் செயல்பாடுகளை டாடா குழுமம் கவனித்து வந்தது.

ஆகஸ்ட் 31, 2015 நிலவரப் படி ஹோட்டலை அதன் உரிமையாளரான ஜூம்மா அல் மஜித் குழுமத்திடம் திரும்ப ஒப்படைத்ததாக அந்த அறிக் கையில் குறிப்பிட்டுள்ளது.

துபாய் தாஜ் பேலஸ் ஹோட் டலை 2001 லிருந்து வெற்றிகரமாக நடத்தி வந்ததாகவும், இது தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 31 ஆகஸ்ட் 2015 ல் திரும்ப ஒப்படைக்கப்பட்டது என்று டாடா குழுமம் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வர வேறு எந்த காரணங்களும் கிடையாது.

ஜூம்மா அல் மஜீத் குழுமத் தோடு மிகச் சிறந்த புரிதலோடு செயல்பட்டோம். இரண்டு தரப்புக்கும் நல்ல உறவு நிலவி யது. புரிதல் மற்றும் நம்பகத் தன்மையோடு இரண்டு நிறுவ னங்களும் செயல்பட்டன என்று கூறியுள்ளது

மேலும் இந்த அறிக்கையில் மத்திய கிழக்கு நாடுகளில் தொடர் ந்து செயல்படுவது உத்தி ரீதியாக குழுமத்துக்கு முக்கியமானது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. சமீபத்தில் 296 அறைகள் கொண்ட உயர்தர சொகுசு ஹோட்டலை துபாய் புர்ஜ் கலிபாவில் டாடா துவங்கியுள்ளது.

தாஜ் ஹோட்டல்ஸ் 1901ல் தொடங்கப்பட்டது. உலக அளவில் 61 இடங்களில் 91 ஓட்டல்களை டாடா குழுமம் நிர்வகித்து வருகிறது. இந்தியா தவிர வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மத்திய ஆசியா, மலேசியா, இலங்கை, மாலத்தீவு போன்ற இடங்களில் செயல்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x