Published : 29 Jun 2020 07:10 AM
Last Updated : 29 Jun 2020 07:10 AM

புதிய வரி நடைமுறையில் ஊழியர்களின் பயணப் படிக்கு வரிவிலக்கு சலுகை அறிவிப்பு

பட்ஜெட்டில் புதிய வரி நடைமுறையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார். இந்தப் புதிய வரி நடைமுறையானது குறைந்த வரி விதிப்புநடைமுறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தப் புதியவரி நடைமுறையில் முன்பு வழங்கப்பட்டு வந்த பல வரி விலக்கு சலுகைகள் நீக்கப்பட்டன.

தற்போது பயணப்படிக்கானவரி சலுகை அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயணச் செலவுகளுக்கான படி, சுற்றுலா பயணத்துக்கான செலவுகள், பணியிட மாறுதலுக்கான பயண செலவுகள், வேலை நிமித்தமான பயணச் செலவுகள் போன்றவற்றுக்கு வரிவிலக்கு கோரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணங்களின் போது ஆகும் இதர செலவுகளும் நிறுவனம் வழங்கும்பட்சத்தில் அதற்கும் வரிவிலக்கு கோரலாம்.

ஆனால், அலுவலகத்தில் இலவச உணவு, தேநீர் போன்ற பானங்களுக்கான செலவுகள் இதில் சேர்க்கப்பட மாட்டாது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையற்றோர், காதுகேளாதோர் மற்றும் பிற மாற்றுத்திறனாளி ஊழியர்கள் கூடுதலாக மாதம் ரூ.3,200 வரை வரி விலக்குப்பெற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x