Published : 14 Jun 2020 06:06 PM
Last Updated : 14 Jun 2020 06:06 PM

சுயசார்பு இந்தியா திட்டம்; சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பட்டுவாடா

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு ஒதுக்கப்பட்ட கடன் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு அளவிற்குப் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்த கடன் தொகையான ரூ.3,112.63கோடியில், 46,390 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ரூ.1,936.68 கோடி அளவிற்குக் கடன் பெற்றுள்ளன.

கோவிட் -19 ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு, பல்வேறு தொகுப்பு உதவிகளை அறிவித்துள்ளது. இது தவிர, தொழில்துறையினரின் பல்வேறு பிரிவினருக்கும், ஏராளமான நிதியுதவித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், கடந்த வியாழக்கிழமை வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.29,490.81 கோடி அளவிற்கு கடனுதவி அளிக்க அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட கடன் தொகையில், ரூ.14,690,84 கோடி அளவிற்கு ஏற்கெனவே பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் இதுவரை அனுமதிக்கப்பட்ட ரூ.

3,112.63 கோடியில், 46,390 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,936,68 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. கோவிட்-19 ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கும், தொழிலுக்கு புத்துயிரூட்டவும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி தேவைப்பட்டது. விவசாயம், கல்வி, தொழில்துறையினருக்கு வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டதுடன், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும், பொதுத்துறை வங்கிகள் பெரும் பங்கு வகித்தன.

உடனடி நிதிநெருக்கடிகளிலிருந்து மீண்டுவர மக்கள் தனிநபர் கடனுதவி பெறுவதற்கோ அல்லது சிறுதொழில் அல்லது வர்த்தகத்தைத் தொடங்க கடனுதவி பெற உதவுவதன் மூலம், வங்கிகள், சமுதாயத்தின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழ்கின்றன. நிலையான வருமானம் இல்லாததால், வங்கிக்கடன் பெற்றவர்கள், ஊரடங்கு காலத்தில் கடனைத் திருபபிச் செலுத்துவது, மிகுந்த சிரமமான காரியமாக இருந்தது.

வங்கிக்கடன் பெற்றவர்கள், அதனை திருப்பிச் செலுத்த செப்டம்பர் மாதம் அவரை அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ள போதிலும், கடனுதவி பெற்றவர்களில் பெரும்பாலானோர், கடன் தவணைகளுக்கு சலுகை காலத்தில் கூடுதல் வட்டி விதிக்கக் கூடாது எனபலரும் வலியுறுத்தியுள்ளனர்.

கோவிட் பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மக்கள், தாங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு, நிதியுதவி மற்றும் கடனுதவி தேவை என்றும் கருதுகின்றனர். வர்த்தகம், வியாபாரம் அல்லது தனிநபர் வாழ்வாதாரமாக இருந்தாலும் சரி, பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்ட, வங்கிகளின் ஒத்துழைப்பு அல்லது பிற வகையான உதவிகள் தேவைப்படுகிறது.

மத்திய அரசும், நாட்டின் பொருளாதார நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், மக்களும் தொழில் துறையினரும் நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதற்காக, தக்க நேரத்தில், சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம், பல்வேறு சிறப்புத் தொகுப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x