Published : 21 Mar 2020 13:34 pm

Updated : 21 Mar 2020 13:34 pm

 

Published : 21 Mar 2020 01:34 PM
Last Updated : 21 Mar 2020 01:34 PM

தங்கம் விலை சற்று உயர்வு: இன்றைய விலை நிலவரம் என்ன?

gold

சென்னை

தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறது. இந்தநிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.3966-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.31728க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 33312 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 19 பைசா குறைந்து 40.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


Goldதங்கம் விலை சற்று உயர்வுஇன்றைய விலை நிலவரம் என்ன?

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author