Last Updated : 08 Feb, 2020 05:19 PM

 

Published : 08 Feb 2020 05:19 PM
Last Updated : 08 Feb 2020 05:19 PM

கரோனா வைரஸ்: சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் வருவாய் சரியும்?

பிரதிநிதத்துவப் படம்

ஷாங்காய்

கரோனா வைரஸ் சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் 2020 வருவாயில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் அமெரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவில் பரவிய கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக 189,660 பேர் கண்காணிப்பில் உள்ளனர் என்றும், 27,657 பேர் வைரஸ் பாதிப்புக்குள்ளானதாக அவர்கள் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமையன்று 6,101 பேருக்கு வைரஸ் நோய்த் தாக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று 2,050 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வைரஸ் நோய் தாக்கம் காரணமாக சீனாவில் உள்ள 87 சதவீத அமெரிக்க நிறுவனங்கள் 2020ல் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்புகளை எதிர்கொள்ளும் என்றும் சேம்பர் ஆப் காமர்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஷாங்காயில் அமைந்துள்ள அமெரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூறியுள்ளதாவது:

சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவாக கடந்த ஆண்டைவிட சீனாவின் ஜிடிபியில் இந்த ஆண்டு 2 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்ற ஆசியாவில் பல்லாயிரக்கணக்கான தொற்றுநோய்களைப் பரவச் செய்த கரோனா வைரஸ் சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் 2020 வருவாயிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இதனால் சீனாவில் உள்ள 87 சதவீத அமெரிக்க நிறுவனங்கள் 2020ல் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்புகளை எதிர்கொள்ளும்.

இதனை கருத்தில்கொண்டு 60 சதவீத அமெரிக்க நிறுவனங்கள் தனது பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றும்படி (work from home) நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இவ்வாறு ஷாங்காயில் அமைந்துள்ள அமெரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x