Published : 29 Aug 2015 10:27 AM
Last Updated : 29 Aug 2015 10:27 AM

இவரைத் தெரியுமா?- வினோத் சஹானி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார்.

கொல்கத்தாவில் பள்ளிக்கல்வியை முடித்தவர். பிட்ஸ் பிலானியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கும், ஜாம்ஷெட்பூர் எக்ஸ்.எல்.ஆர்.ஐ. நிறுவனத்தில் எம்பிஏவும் படித்தவர்.

30 வருடங்களுக்கு மேலாக தொழில் நிர்வாகத்தில் அனுபவம் மிக்கவர். 16 வருடங்கள் ஜிஇ நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதன் பிறகு ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்துள்ளார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷனில் இணைவதற்கு முன்பு, பார்தி குழுமத்தில் 10 வருடங்கள் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியவர்.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இணைத்தலைவர், இயக்குநர் குழு உறுப்பினர், பார்தி ரீடெய்ல் நிறுவனத்தின் தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x