Published : 27 Aug 2015 10:24 AM
Last Updated : 27 Aug 2015 10:24 AM

சிஎன்ஜி கார்களுக்கு ரூ.1 லட்சம் சலுகை: டிரைவர்களுக்கு ஓலா அறிவிப்பு

மொபைல் செயலி மூலம் இயங் கும் ஓலா கால்டாக்ஸி நிறுவனம் தங்களிடம் வாகனங்களை இணைத்து இயக்கும் டிரைவர் களுக்கு ரூ.1 லட்சம் வரை சலுகை அறிவித்துள்ளது. தங்களது வாகனங்களை சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனமாக மாற்றிக் கொள்ளும் ஓட்டுநர்களுக்கு இந்த சலுகையைக் கொடுக்க உள்ளது.

டெல்லியில் ஓடும் வர்த்தக வாகனங்கள் சிஎன்ஜி மூலம்தான் இயங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஓலா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 01 வரை ஓலா கிரீன் பிரகதி வாரம் என அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை ஓலா வெளியிட்டுள்ளது. ஓலாவில் வாகனத்தை இணைத்துள்ள ஓட்டுநர்கள், கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் கார் உற்பத்தி நிறுவனங்களை இந்த திட்டத்தின்கீழ் ஓலா ஒருங்கிணைக்கிறது. இந்த திட்டத்தின்கீழ் சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனத்தை வாங்கும் ஓட்டுநர்கள் ரூ.1 லட்சம் வரை பயனடைவார்கள். மாருதி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் ரூ. 60,000 வரை சலுகைகளை இந்த திட்டத்தின் கீழ் அளிக்கின்றன.

டெல்லியில் சிஎன்ஜி வாகனங் களை இயக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக முதற்கட்டமாக ஓட்டுநர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்குகிறோம். இந்த திட்டத்தில் ஓட்டுநர்கள் புதிய கார் வாங்க, அல்லது பழைய காரை சிஎன்ஜி வாகனமாக மாற்றிக் கொள்ளலாம் என்று ஓலா நிறுவனத்தின் வடக்கு பகுதி வர்த்தகப் பிரிவு தீப் சிங் கூறினார்.

டெல்லியில் ஓலா நிறுவனத் தின் பெரும்பகுதியான கார்கள் சிஎன்ஜி வாகனமாக மாறியுள்ளது. கடந்த வாரத்தில் 3,000 சிஎன்ஜி வாகனங்கள் ஓலாவில் இணைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x