Published : 15 Jan 2020 13:03 pm

Updated : 15 Jan 2020 13:05 pm

 

Published : 15 Jan 2020 01:03 PM
Last Updated : 15 Jan 2020 01:05 PM

இந்தியாவின் சிறு, நடுத்தரத் தொழில்கள் டிஜிட்டல் மயமாக்கம்: 1 பில். டாலர்களை முதலீடு செய்ய அமேசான் திட்டம்

amazon-to-invest-1-billion-to-digitise-small-and-medium-businesses-in-india

3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமேசான் தலைவர் ஜெஃப் பெசாஸ் இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை டிஜிட்டல் மயமாக்க இங்கு 1 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெசாஸ் கூறும்போது, “21ம் நூற்றாண்டு இந்திய நூற்றாண்டாகப் போகிறது. இதில் முக்கியமான கூட்டணி இந்திய-அமெரிக்கக் கூட்டணியாகும்” என்றார்.

மேலும் 2025-ம் ஆண்டு வாக்கில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள மேக் இன் இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அமேசான் சி.இ.ஓ பெசாஸின் 3 நாள் இந்தியப் பயணம் புதனன்று தொடங்கியது, முன்னதாக ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார் பெசாஸ்.


Amazon to invest $1 billion to digitise small and medium businesses in Indiaஇந்தியாவின் சிறுகுறு தொழில்கள் டிஜிட்டல் மயமாக்கம்: 1 பில். டாலர்களை முதலீடு செய்ய அமேசான் திட்டம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author