Published : 31 Jul 2015 09:27 AM
Last Updated : 31 Jul 2015 09:27 AM

இவரைத் தெரியுமா?- மணீஷ் கோயங்கா

இமாமி குழும நிறுவனத்தின் இயக்குநர். இமாமி நிறுவன இணை நிறுவனர் மற்றும் முழு நேர இயக்குநரான ராதே ஷ்யாம் கோயங்காவின் மகன்.

இந்த குழுமத்தின் நிதிக்குழு உறுப்பினர், பங்குதார்கள் சேவைக்குழு உறுப்பினர், நிறுவனத்தின் சமூக பொறுப்பு குழுவின் உறுப்பினர் என பல பொறுப்புகளை வகிக்கிறார்.

இமாமி பேப்பர்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் மற்றும் கொல்கத்தாவில் உள்ள ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையின் இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

சந்தைப்படுத்துதல், கார்ப்பரேட் பிளானிங், தொழில் மேம்பாடு, தொழில் உத்தி திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுபவம் கொண்டவர்.

இமானி பயோடெக், பானு வியபார், சிஆர்ஐ, பிரஸ்டீஜ் வியாபார் நிறுவனங்களின் இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

குளோபல் இந்தியா நிறுவனத்தின் ‘மேன் ஆப் தி இயர்’ விருதை 2011 ஆண்டு பெற்றுள்ளார்.

கொல்கத்தாவிலுள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் வணிகவியல் பட்டமும், அமெரிக்காவில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x