Published : 06 Oct 2019 11:30 AM
Last Updated : 06 Oct 2019 11:30 AM

நிறுவனங்கள் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து

நிறுவனங்கள் சமூக பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு செயல் பட வேண்டும். அதன் பங்குதாரர் கள் லாபத்தை மட்டும் குறிக் கோளாகக் கொள்ளாமல் பொரு ளாதார அடிப்படையில் சமூகத்தை சமநிலைச் சமூகமாக மாற்றுவ தையும் நோக்கமாக கொள்ள வேண்டும். இதை அவர்களுக்கு உணர்த்தச் செய்வதில் நிறுவனங் களின் செயலாளர்களுக்கே அதிக பொறுப்பு உள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் நடைபெற்ற இந்திய நிறுவன செயலாளர்களுக்கான அமைப்பின்(ஐசிஎஸ்ஐ) 51-வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் இக் கருத்தை அவர் தெரிவித்தார்.

நிறுவனங்களின் நோக்கம், அதை செயல்படுத்துவதில் செய லாளர்களின் பங்கு ஆகியவை குறித்து அவர் பேசினார். ‘சில நிறுவனங்கள் மக்களின் நம்பிக் கையை இழந்துவிடுகின்றன. அந்த நம்பிக்கையிழப்பு நிறுவனங் களை பாதித்தாலும், அச்செயல் பாடுகளால் பெருமளவில் பாதிப் புக்கு உள்ளாவது சாதாரண மக்கள் தான். எனவே நிறுவனங்கள் மக்க ளின் நம்பிக்கையை இழக்காத வண்ணம் செயல்பட வேண்டும். அதற்கு நிறுவன செயலாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். குறைகளைச் சுட்டிக்காட்டுவதும் அவற்றிலிருந்து பாடம் கற்பதும் அவசியம்’ என்றார்.

சில நிறுவனங்கள் சமூகம் சார்ந்து எந்த பங்களிப்பையும் செலுத்தாமல் வெறும் லாபத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறன்றன. அது மட்டுமல்லாமல், அந்த லாபவெறி யில் அடிப்படை விழுமியங்களை யும் பின்பற்றத் தவறுகின் றன. நிறுவனத்துக்கான சமூக பொறுப்பை, அதன் அறவிழுமி யங்களை பங்குதார்களுக்கு எடுத் துரைப்பது அதன் செயலாளரின் கடமையாகும். இந்நிலையில் அந்நிகழ்சியில் கலந்து கொண்ட அவர், நிறுவன செயலாளர்களின் அடிப்படைப் பணிகளைக் கோடிட் டுக் காட்டினார்.

‘வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்றல், உண்மை, நம் பகத்தன்மை ஆகியவை ஒரு நிறுவனத்தின் அடிப்படைத் தூண் கள். இவை அந்த நிறுவனத் தில் முறையாக நடைமுறைப்படுத் தப்படுவதை அதன் செயலாளர் களே உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கே இதில் அதிக பொறுப்பு உள்ளது. நிறுவனத்தின் நிர்வாக ரீதியாக நெருங்கிய தொடர்பில் இருக்கக்கூடியவர்கள் அதன் செயலாளர்கள். அந்தவகை யில் பங்குதாரர்களை முறையான வழியில் செயல்படச் செய்வது அவர் களின் கடமையாகும். இந்தியா உலக அளவில் முக்கிய வணிகக் கேந்திரமாக மாறிவருகிறது.

இந்நிலையில் நிறுவனங்கள் அதன் அடிப்படைக் கொள்கை களை பின்பற்றுவது இந்தியாவை மேலும் வளர்ச்சியடையச் செய்யும். சமூக நோக்கு அடிப்படையிலான பொறுப்பான வணிகமே ஒரு நிறுவனத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்’ என்று அவர் தெரி வித்தார்.

நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர், கனரகத் தொழி லகங்கள் மற்றும் பொது நிறுவனங் களுக்கான இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெகாவால் ஆகி யோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x