செய்திப்பிரிவு

Published : 13 Aug 2019 11:44 am

Updated : : 13 Aug 2019 11:45 am

 

தங்கம் விலை மேலும் உயர்வு: பவுன் ரூ. 28896-க்கு விற்பனை 

gold

சென்னை

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ. 28,896-க்கு விற்கப்படுகிறது.

உலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை அண்மையில் உயர்ந்து வருகிறது.

இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கணிசமாக உயர்ந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்தது. இன்று (ஆக.13) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ. 28,896-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 3612.00-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 48.50 ரூபாயாக விற்பனையாகிறது.

Goldதங்கம் விலை

Popular Articles

You May Like

More From This Category

More From this Author