Published : 09 Aug 2019 08:42 AM
Last Updated : 09 Aug 2019 08:42 AM

தொழில் துறையை ஊக்குவிக்க விரைவில் திட்டம்; பொருளாதார வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

தொழில் துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

புதுடெல்லி

தொழில் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள தேக்கநிலையைப் போக்க தேவையான நடவடிக்கைகளை அரசு விரைவில் எடுக் கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நேற்று தொழில் துறை பிரதிநிதிகளை சந்தித்துப் பேசிய அவர் இத்தகைய உறுதியை அவர்களிடம் அளித் தார். மேலும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக் கும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.

தொழில்துறையின் தலைவர்கள், நிதித் துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பொருளாதார தேக்க நிலைக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டன. தேக்கநிலையைப் போக்க எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

வங்கிகளிடம் நிறுவனங்களுக்கு கடன் வழங்க போதுமான நிதி இல்லை என்ற பிரச்சினை தற்போது கிடையாது. மாறாக, பொருளாதாரத்தில் தேக்கநிலை நிலவு கிறது. அதிலும் குறிப்பாக வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடையே (என்பிஎஃப்சி) இத் தகைய தேக்கநிலை நிலவுவதாக செய்தி யாளர்களிடம் அமைச்சர் குறிப்பிட்டார்.

என்பிஎஃப்சி பிரச்சினை காரணமாக ஆட்டோமொபைல், வீட்டுக் கடன் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் (எம்எஸ்எம்இ) நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தொழில் துறையினரிடம் உறுதி அளித்துள் ளேன். அந்த திட்டம் விரைவில் வெளியிடப் படும், அதுவரை காத்திருங்கள் என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறினார்.

சமூகப் பொறுப்புணர்வு திட்டத்துக்கான செலவினங்களை (சிஎஸ்ஆர்) சரியாக செலவிடாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் அத்தகைய நடவடிக்கை இப்போதைக்கு எடுக்கப்பட மாட்டாது என உறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சிஎஸ்ஆர் செலவினங்களை மேற்கொள்ளாத நிறுவனங்கள் மீது சிறை தண்டனை விதிக்க விதிமுறைகள் உள்ளதாகக் கூறப்படுவதை நீக்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

தொழில் துறையை ஊக்குவிக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு எத்தகைய நட வடிக்கை எடுப்பது என்பது குறித்து அரசும் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் ஆலோசித்த தாக இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) துணைத் தலைவர் டி.வி. நரேந்திரன் கூறினார். ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டிக் குறைப்பின் பலன் உடனடியாக பயனாளர் களுக்கு போய்ச்சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஃபிக்கி அமைப்பின் முன் னாள் தலைவர் ஜோத்ஸனா சூரி வலியுறுத்தியுள்ளார்.

தொழில் துறையை ஊக்குவிக்க உடனடி யாக தனி தொகுப்பை ஒதுக்கி முதலீடு களுக்கான சூழலை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று அசோசேம் தலைவர் பி.கே. கோயங்கா வலியுறுத்தினார். உள்நாட்டி லும் சர்வதேச அளவிலும் ஏற்பட்டுள்ள தேக்க நிலையைப் போக்க உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

தொழில்துறை ஊக்க நிதியாக ரூ. 1 லட்சம் கோடியை ஒதுக்கலாம் என்று தொழில் துறையினர் இக்கூட்டத்தில் வலியுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x