Published : 23 Jul 2019 09:51 AM
Last Updated : 23 Jul 2019 09:51 AM

உயர் மதிப்பு பரிவர்த்தனைகளுக்கு ஆதார் எண் கட்டாயம் ஆகிறது: விரைவில் நடைமுறைப்படுத்த அரசு முடிவு

புதுடெல்லி

இனி பெரிய தொகைகளில் பரிவர்த்தனை செய்ய பான் எண் வழங்கினால் மட்டும் போதாது, ஆதார் எண் சரிபார்ப்பும் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதை விரைவில் நடைமுறைப்படுத்த அரசு தீவிரமாக உள்ளது.

நாட்டில் ரொக்கப் பரிவர்த் தனையைக் கட்டுப்படுத்தவும், கருப் புப் பண உருவாக்கத்தை குறைக் கவும் அரசு பல்வேறு முயற் சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்ற பண மதிப்பிழப்பு நடவடிக் கையை அரசு எடுத்தது.

இந்நிலையில் சமீபத்திய பட் ஜெட்டில் பெரிய தொகை பரி வர்த்தனைகளுக்கு ஆதார் எண் சரிபார்த்தல் கட்டாயமாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிதி மசோதாவில் மேற்கொள்ள உள்ள மாற்றங்களில் இது குறிப் பிடப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு மேல் பணம் எடுத்தாலோ, இருப்பு வைத்தாலோ ஆதார் எண் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட உள்ளது. இ-கேஒய்சி, பயோமெட்ரிக் அல் லது ஒன் டைம் பாஸ்வேர்ட் மூலம் இதைச் செயல்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

ரொக்கப் பரிவர்த்தனை மட்டு மல்லாமல், அந்நிய செலாவணி பரி மாற்றம், தங்கம் வாங்குதல், சொத்து வாங்குதல் என அனைத்திலும் இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த ஆதார் சரிபார்ப்பு கட்டாய முறையைச் செயல்படுத்த தேவையான பரிவர்த்தனை வரம்பை நிர்ணயிப்பது இதில் உள்ள சவாலாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுவருவதாக அதிகாரி கள் தெரிவிக்கின்றனர். நிர்ண யிக்கப்படும் வரம்பு நியாயமான குறைந்த அளவிலான பரிவர்த் தனைகளைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்பதில் தெளி வாக இருப்பதாகவும், ஆண்டுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் என்ற அளவில் வரம்பு நிர்ணயிக்கப் பட வாய்ப்புள்ளது எனவும் கூறு கின்றனர். அவ்வாறு நிர்ணயிக்கப் படும் வரம்புக்கு மேல் பரிவர்த் தனைகளில் ஈடுபட்டால் ஆதார் எண் சரிபார்த்தலுக்கு உள்ளாக்கப் படுவது கட்டாயம் ஆகும்.

பெரும்பாலான உயர் மதிப்பு பரிவர்த்தனைகளில் போலி பான் எண் வழங்கப்படுவதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பரிவர்த்தனைகளின் உண்மைத்தன்மையைக் கண் காணிப்பது கடினமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆதார் எண் சரிபார்த்தலை கட்டாயமாக்குவதன் மூலம் கருப்புப் பண உருவாக்கம், லஞ்சம் போன்ற பரிவர்த்தனைகள் நடப்பதைக் குறைக்க முடியும் என அரசு நம்புகிறது.

உயர் மதிப்பு பரிவர்த்தனை களுக்கு ஆதார் எண் சரிபார்த் தலை கட்டாயமாக்கும் நடவடிக்கை களை அரசு தீவிரமாக மேற் கொண்டுவருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியா கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ரொக்கப் பரிவர்த்தனை மட்டுமல்லாமல், அந்நிய செலாவணி பரிமாற்றம், தங்கம் வாங்குதல், சொத்துவாங்குதல் என அனைத்திலும் இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x