Last Updated : 30 Jul, 2015 10:31 AM

 

Published : 30 Jul 2015 10:31 AM
Last Updated : 30 Jul 2015 10:31 AM

தங்க நகை திட்டத்தை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்: நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் வலியுறுத்தல்

மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள தங்க நகை திட்டத்தில் உரிய மாற்றங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் (நிதி) தலைவருமான வீரப்ப மொய்லி வலியுறுத்தியுள்ளார்.

தங்க நகை வர்த்தகர்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் (நிதி) அளித்துள்ள பரிந்துரைகள் ஆராயப்படும் என்ற அவர், வர்த்தகர்கள் எழுப்பியுள்ள சந்தேகங்கள் பரிசீலிக்கப்பட்டு அதனடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களின் கருத்தை முழுவதுமாகக் கேட்டறிந்து விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். துறையினரின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக உரிய கொள்கை வகுக்கும்படி நிதிக்குழுவின் பரிந்துரை இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கும் விதமாகவும், தங்கத்தின் இறக்கு மதியைக் குறைப்பதற்காகவும் உள்நாட்டில் இருப்பில் உள்ள தங்கத்தை வெளிக்கொணர் வதற்காக தங்க நகைகளுக்கு வட்டி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி வங்கிகளில் தங்க நகைகளை வைத்து வட்டியைப் பெறலாம். நகையாக அளித்தாலும் முதிர்வு சமயத்தில் அது தங்க பிஸ்கெட்டாகவோ அல்லது நாணயமாகவோ அளிக்கப்படும்.

இந்த திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தனது கருத்து அல்ல. இத்துறையைச் சேர்ந்த பலரும் இக்கருத்தைத் தெரிவித்துள்ளனர். ஒரு திட்டம் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை எனில் அந்த திட்டத்தை கொண்டுவருவதில் என்ன பயன் இருக்க முடியும்.

தங்க அடமானத் திட்டத்தை மக்களிடையே பிரபலப்படுத்து வதற்காக அனைத்து நடவடிக்கை களையும் அரசு எடுக்கும் என்று கூறிய அவர், இத்திட்டம் எளிமையாகவும், பொதுமக்களுக்கு பலன் அளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு சதவீதம் முதல் 2 சதவீத வட்டிக்கு தங்கத்தை அடகு வைப்பதை மிகக் குறைவான மக்களே விரும்புவர் என்று குறிப்பிட்டார். மேலும் தங்கம் என்பது ஒரு குடும்பத்தின் பாரம்பரியம் சார்ந்த விஷயம். தங்கள் மூதாதையர்களின் நகைகளை உருக்குவதை ஒரு போதும் மக்கள் விரும்ப மாட்டார்கள். இது உணர்ச்சி பூர்வமான விஷயமாக பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் தங்கத்தை உருக்கி அதன் தரத்துக்கு சான்றளிக்கும் நிறுவனங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும் பட்சத்தில்தான் இது பிரபலமாக அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும். அனைத்துக்கும் மேலாக தங்க நகை சேமிப்பு கணக்கு தொடங்கு வது மிகவும் சிக்கலாக உள்ளதை யும் அவர் சுட்டிக் காட்டினார்.

உள்நாட்டில் தங்க நகைகளை வெளிக்கொணர்வதன் மூலம் இறக்குமதியைக் குறைக்க முடியும் என அரசு நம்புகிறது.

அதே சமயத்தில் இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யத்தேவை இல்லை என உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சோமசுந்தரம் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x