Last Updated : 24 Jun, 2015 10:11 AM

 

Published : 24 Jun 2015 10:11 AM
Last Updated : 24 Jun 2015 10:11 AM

மீண்டும் இன்போசிஸ் தலைவராகும் கோரிக்கையை நிராகரித்தார் நாராயணமூர்த்தி

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு நாராயண மூர்த்தி திரும்ப வரவேண்டும் என நிறுவனப் பங்குதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் பங்குதாரர்களின் விருப் பத்தை மூர்த்தி நிராகரித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் 34 வது ஆண்டு பங்குதாரர்கள் கூட்டம் திங்கள்கிழமை பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நிறுவ னத்தின் பங்குதாரர்களாக நாரா யணமூர்த்தி தனது மனைவி சுதா மூர்த்தி மற்றும் தனது மகன் ரோஹன் மூர்த்தியுடன் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

நாராயணமூர்த்தி திரும்பவும் நிறுவனத்தின் தன்னிச்சையான இயக்குநராக பொறுப்பேற்க வேண்டும் என நிறுவனம் விரும்பு வதாக கோபாலகிருஷ்ண ராவ் என்கிற பங்குதாரர் கூறினார்.

மூர்த்தி 2014 ஆண்டு ஜூன் மாதம் நிறுவன தலைமை பொறுப்பிலிருந்து விலகினார். அதற்கு பிறகு பொறுப்புகள் அற்ற தலைவராக அக்டோபர் வரை பணியாற்றினார்.

முதலீட்டாளர்களின் இந்த கருத்து குறித்து பேசிய நாராயண மூர்த்தி அவர்கள் என் மீது கொண்டுள்ள பிடிப்பின் காரணமாக அவ்வாறு கூறுகின் றனர் என்று தெரிவித்தார்.

மேலும் தற்போது நிறுவனம் மிகச் சிறந்த தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. அவர்கள் நிறுவனத்தை வழிநடத்தி வருகின்றனர். நாம் அனைவரும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று செய்தியா ளர்களிடம் குறிப்பிட்டார்.

திரும்பவும் நிறுவனத்துக்கு உள்ளே வந்துதான் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதில்லை. வெளி யில் இருந்தும் வளர்ச்சிக்கு உதவலாம். இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவரான சேஷாசாயி பேசும்போது நாராயணமூர்த்தி நிறுவனத்தின் பீஷ்ம பிதாமகனாக இருக்க விரும்புகிறார் என்று குறிப்பிட்டார். மூர்த்தி நிறுவனத்துக்கு வெளியில் இருக்கிறாரா உள்ளுக்குள் இருக்கிறாரா என்பதல்ல அவர் எப்போதும் நல்ல வழிகாட்டியாக இருக்கிறார். எங்களுக்கு எப்போது ஆலோசனை தேவை என்றாலும் அவரிடம் நிச்சயம் செல்வோம் என்றார்.

நிறுவனத்தின் பொறுப்புகளற்ற தலைவராக சேஷாசாயி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே இந்த பதவியில் கே.வி காமத் இருந்தார். காமத் ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு சேஷாசாயி பொறுப்புக்கு வந்தார். மேலும் நராயணமூர்த்தி ஆண்டுகூட்டத்துக்கு தற்போதைய தலைவர் விஷால் சிக்காவுடன் வந்திருந்தார். அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித் தார்.

கூட்டத்துக்கு பிறகு செய்தியா ளார்களிடம் பேசிய விஷால் சிக்கா, சேஷாசாயி கூறியபடி மூர்த்தி எங்களுடைய பீஷ்ம பிதாமகனாக இருந்து வழிகாட்டுகிறார். நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம் என்று குறிப்பிட்டார்.

செய்தியாளர்களின் கேள்வி களுக்கு பதிலளித்த நாராயண மூர்த்தி நிறுவனத்தின் மேலாண் மை குழு மிகச் சிறப்பாக உள்ளது. அர்பணிப்புடன், கடுமையாக உழைக்கிறார்கள். நூறு சதவீதம் சிறப்பாக உழைக் கிறார்கள் என்றார்.

விஷால் சிக்கா பதவியேற்று ஒரு வருடத்தைய செயல்பாடு குறித்த கேள்விக்கு, சிறந்த தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறார். கடினமாக உழைக்கிறார். 2020 என்கிற இலக்கு வைத்து உழைக்கிறார். சிறந்த தலைவராக இருக்கிறார் என்றும் நாராயணமூர்த்தி குறிப் பிட்டார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x