Published : 31 May 2015 11:48 AM
Last Updated : 31 May 2015 11:48 AM

மத்தியப் பிரதேசத்தில் கரன்சி காகித ஆலையை அருண் ஜேட்லி தொடங்கி வைத்தார்

ரூபாய் நோட்டுகளை (கரன்சி) அச்சடிக்கத் தேவையான காகிதத்தைத் தயாரிக்கும் ஆலையை மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தொடங்கி வைத்தார்.

பிரதமரின் `மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த ஆலை தொடங்கப்படுவதாக ஜேட்லி குறிப்பிட்டார்.

தற்போது உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தாள்களில் அச்சடிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு பயன்படும் இங்க் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

ஆண்டுக்கு 6000 டன் காகிதத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலை செயல்படுவதன் மூலம் இனி வரும் காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் காகிதத்தின் மூலமே உயர் மதிப்பு கொண்ட நோட்டுகளை அச்சிட முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

பின்தங்கிய மாநிலம் எனக் கூறப்பட்டு வந்த மத்தியப்பிரதே சத்தில் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அந்த நிலையை மாற்ற முயன்று வருகிறார். அதில் முதலாவதாக மேக் இன் இந்தியா திட்டத்தின் அடிப்படையில் இங்கு கரன் சிக்கான காகித ஆலை தொடங்கப் படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

விவசாயம் மற்றும் கட்டமைப்புத் துறை மேம்பாட்டுக்கான நடவ டிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. தற்போது தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால் இம்மாநிலம் மேற்கொள்ளும் உற்பத்தி ஆலை திட்டங்களுக்கு மத்திய அரசு நிச்சயம் உதவும் என்று ஜேட்லி உறுதியளித்தார்.

மொரார்ஜி தேசாய் மத்திய நிதி அமைச்சராக இருந்த காலத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஹொசங்காபாதில் கரன்சிக்கான காகித ஆலை செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு குறைந்த மதிப்பிலான நோட்டுகளை அச்சிடுவதற்கான காகிதம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது இந்த ஆலை விரிவுபடுத்தப்பட்டு இங்கு உயர் மதிப்பிலான நோட்டுகளை அச்சிடுவதற்கான காகித தயாரிப்பு பகுதி உருவாக்கப்பட்டுள்ளது என்று ஜேட்லி குறிப்பிட்டார்.

மைசூரில் உள்ள கரன்சி காகித தொழிற்சாலை ஆண்டுக்கு 12,000 டன் உற்பத்தி திறனில் அமைய உள்ளது. இந்த தொழிற்சாலையின் இந்த ஆண்டு இறுதியில் உற்பத்தியைத் தொடங்கும் என்றார் ஜேட்லி.

இந்த இரு தொழிற்சாலைகள் மூலமாக காகிதம் தயாரிக்கப்படுவ தால் 1,500 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய செலாவணி மீதமாகும். மேலும் நாம் இறக்கு மதி செய்யும் நாடுகள் மற்ற நாடு களுக்கும் காகிதத்தை வழங்கு தால் கள்ள நோட்டுகள் அச்சடிக் கப்பட்டு வந்தன. இனி உள்நாட்டில் தயாரிக்கும்பட்சத்தில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது குறையும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x