Published : 22 May 2015 10:05 AM
Last Updated : 22 May 2015 10:05 AM

ஏழு வருடமாக தனது சம்பளத்தை உயர்த்தாத முகேஷ் அம்பானி

தொடர்ந்து ஏழாவது வருட மாக தனது சம்பளத்தை முகேஷ் அம்பானி உயர்த்திக் கொள்ளவில்லை. அவரது சம்பளம் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக 15 கோடி ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது. அதே சமயத்தில் பெரும்பாலான இயக்குநர்களின் சலுகைகள் சிறிதளவு குறைக்கப் பட்டிருக்கிறது.

36.86 கோடி ரூபாய் அளவுக்கு அவரது சம்பளத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டாலும், தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்ளவில்லை.

2009-ம் ஆண்டில் சிஇஓ-க் களுக்கு சம்பளம் அதிகம் என்ற சர்ச்சை எழுந்த போது, சம்பளத்துக்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்துக்கொண்டார்.

அதேபோல நிறுவனத்தின் இயக்குநர் பிஎம்எஸ் பிரசாத்துக் கும் சம்பளம், சலுகைகளும் உயர்த்தப்படவில்லை. அவரது சம்பளம் ரூ.6.03 கோடியாக இருக்கிறது.

சுத்திகரிப்பு பிரிவின் தலைவர் பவன் குமார் கபில் சம்பளம் மற்றும் சலுகைகள் சிறிதளவு சரிந்து ரூ2.41 கோடியாக உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் ரூ.2.49 கோடியாக இருந்தது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x