Published : 30 May 2015 10:17 AM
Last Updated : 30 May 2015 10:17 AM

இந்தியன் ஆயில் நிகர லாபம் 33% சரிவு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 33% சரிந்து ரூ.6,285 கோடியாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 9,389 கோடி ரூபாயாக இருந்ததாக ஐஓசி தெரிவித்தது.

கடந்த 2013-14-ம் நிதி ஆண்டில் 7,735 கோடி ரூபாய் அளவுக்கு எரிபொருள் மானியம் இருந்ததால் நிகர லாபம் அதிகமாக இருந்ததாக நிறுவனத்தின் தலைவர் பி.அசோக் தெரிவித்தார். அந்த மானியத் தொகை இல்லாமல் பார்த்தால் அந்த காலாண்டில் நிகரலாபம் ரூ.1,655 கோடியாக மட்டுமே இருந்திருக்கும். ஒட்டு மொத்த நிதி ஆண்டில் 5,273 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. அதற்கு முந் தைய நிதி ஆண்டில் 7,019 கோடி ரூபாயாக நிகரலாபம் இருந்தது.

ஜனவரி மார்ச் காலாண்டில் ஒரு பேரல் சுத்திகரிப்பதன் மூலம் 8.77 டாலர் வருமானம் வந்தது. கடந்த வருடம் இதே காலாண் டில் ஒரு பேரலுக்கு 2.17 டாலர் மட்டுமே இருந்ததாக நிறுவனம் தெரி வித்தது. ஒரு பங்குக்கு 6.60 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.

இந்தியா சிமென்ட்ஸ் லாபம் ரூ.36.60 கோடி

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 36.60 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதேகாலாண்டில் 157 கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனம் நஷ்டமடைந்திருந்தது.

இந்த காலாண்டில் செயல்பாடு களின் மூலம் கிடைத்த வருமானம் 1,043 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த வருடத்தின் இதே காலத்து டன் ஒப்பிடும் போது 7.25 சதவீதம் குறைந்தது. ஒட்டு மொத்த 2014-15ம் நிதி ஆண்டில் நிகர லாபம் 29.45 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆனால் 2013-14ம் நிதி ஆண்டில் 162 கோடி ரூபாய் அளவுக்கு நிறுவனத்தின் நஷ்டம் இருந்தது.

ஆனால் நிறுவனத்தின் மொத்த வருமானம் ஒட்டுமொத்த நிதி ஆண்டில் குறைந்திருக்கிறது. 2013-14ம் நிதி ஆண்டில் ரூ.4,496 கோடியாக இருந்த மொத்த வருமானம் ரூ.4,453 கோடியாக சரிந்தது.

வர்த்தகத்தின் முடிவில் சிறி தளவு சரிந்து 91.75 ரூபாயாக இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x