Published : 27 Apr 2015 09:45 AM
Last Updated : 27 Apr 2015 09:45 AM

7,800 கோடி ரூபாய் கருப்பு பணத்தை கண்டறிந்தது நிதி புலனாய்வு பிரிவு

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள 7,800 கோடி ரூபாய் கருப்பு பணத்தை நிதி புலனாய்வு பிரிவு கண்டறிந்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நிதி புலனாய்வு பிரிவு 2013-14-ம் நிதி ஆண்டில் சர்ச்சைக்குரிய வர்த்தக நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்து இதனை கண்டறிந்துள்ளது.

இதில் வருமான வரித்துறை கணக்கில் முறைகேடு செய்தது 7,078 கோடி ரூபாய். சுங்கம் மற்றும் சேவை வரி துறை பிரிவில் முறைகேடு செய்தது 750 கோடி ரூபாய் ஆகும்.

இதில் வருமான வரித்துறை 163 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை கைப்பற்றி இருக்கிறது. அதேபோல சேவை வரி துறை 17 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை கைப்பற்றி இருக்கிறது.

இது தவிர அமலாக்கப் பிரிவும் 20 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடான பணத்தை கண்டறிந்துள்ளது, இதில் 17 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகளை கைப்பற்றி இருக்கிறது.தவிர கருப்பு பண தடைச்சட்டத்தின் கீழ் 105 புதிய வழக்குகளை அமலாக்க பிரிவு பதிவு செய்துள்ளது.

2012-13-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது சந்தேகத்துக்கு இடமான 61,953 கணக்குகளை கண்டுபிடித்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டில் இது 31,731 கணக்குகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன.

அனைத்து வங்கி, இன்ஷூரன்ஸ், பங்குச்சந்தை உள்ளிட்ட அனைத்து நிதி சார்ந்த அமைப்புகளும் நிதி புலனாய்வு பிரிவுக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட் டிருக்கிறது.

வரி ஏய்ப்பாளர்கள் பட்டியல் வெளியீடு

வரி ஏய்ப்பாளர்கள் பட்டியலை வருமான வரித்துறை சனிக்கிழமை வெளியிட்டது. 31 நபர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்கள் அனைவரும் செலுத்த வேண்டிய தொகை சுமார் 1,500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறது.

வரி ஏய்த்த நபரின் பெயர், கடைசியாக சமர்ப்பித்த முகவரி, முக்கியமான நிதி தகவல்கள், பான் எண் ஆகியவை செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டன. சம்பந்தப்பட்ட நபர்களிடம் போதுமான சொத்து கள் இல்லை அல்லது அவர்களை பிடிக்க முடியவில்லை என்று வருமான வரித்துறை குறிப்பிட் டுள்ளது.

செய்தித்தாள்களில் வெளி யிடும்போது பொதுமக்கள் அரசுக்கு தகவல் கொடுக்க முடியும். தவிர சம்பந்தப்பட்ட நிறுவனங் கள் சட்டத்துக்கு எதிராக செயல் படுகின்றன என்பதை பொது மக்களுக்கு தெரிவிக்க முடியும் என்று வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்தார். இவர்களது பெயர்கள் ஏற்கெனவே வருமான வரித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தை சேர்ந்த டோடெம் இன்பிரா (401.64 கோடி ரூபாய்), ராயல் பேப்ரிக்ஸ் ( 158 கோடி ரூபாய் ) புணேவை சேர்ந்த பதேஜா பிரதர்ஸ் போர்ஜிங் அண்ட் ஆட்டோ பார்ட்ஸ் (224 கோடி ரூபாய்) மற்றும் மும்பையை சேர்ந்த ஹோம் டிரேட் (72 கோடி ரூபாய்) ஆகியவை அதிக தொகை செலுத்த வேண்டிய நிறுவனங்கள் ஆகும்.

இந்த பட்டியலை வெளியிட்டது மட்டுமல்லாமல் உடனடியாக வரி செலுத்த வேண்டும் என்றும் வருமான வரித்துறை கூறி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x