Published : 25 Apr 2015 10:08 AM
Last Updated : 25 Apr 2015 10:08 AM

இவரைத் தெரியுமா?- பி.வி.ஆர்.மோகன் ரெட்டி

சியண்ட் இன்போடெக் மற்றும் இன்போடெக் ஐடி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர்.

1991ல் சியண்ட் இன்போடெக் நிறு வனத்தை தொடங்கினார். உலக நிறுவனங்களுக்கு இந்திய பொறியாளர்களின் சேவையை இவரது நிறுவனம் செய்து கொடுத்தது.

2003ம் ஆண்டிலிருந்து நாஸ்காம் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். தற்போது இதன் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

2008-09 ம் ஆண்டில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தென் பிராந்திய தலைவராகவும் இருந்துள்ளார். தற்போது சிஐஐ தேசிய அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருக்கிறார்.

காக்கிநாடாவில் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் பட்டமும், கான்பூர் ஐஐடி மற்றும் அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி படித்தார்.

ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

அமெரிக்கன் சொசைட்டி ஆப் மெக்கானிக்கல் இன்ஜீனியர்ஸ் (ASME) அமைப்பு அவுட்ஸ்டாண்டிங் லீடர்ஷிப் என்கிற விருது வழங்கி கவுரவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x