

உருக்கு உற்பத்தியில் (நடப்பு ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் அடிப்படையில்) அமெரிக்காவை விஞ்சியது இந்தியா. இந்த இரண்டு மாதங்களில் 1.456 கோடி டன் உருக்கினை இந்தியா உற்பத்தி செய்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பிறகு 4-வது இடத்தில் இந்தியா இருந்தது.
இந்த இரண்டு மாதங்களில் 12.76 கோடி டன் உற்பத்தி உலகளவில் நடந்திருக் கிறது. இதில் பாதி அளவு சீனாவில் உற்பத்தி செய்யப் படுகிறது.