Published : 25 Mar 2015 10:11 AM
Last Updated : 25 Mar 2015 10:11 AM

16 பிரத்யேக விற்பனையகம் தொடங்க லெனோவா நிறுவனம் திட்டம்

கம்ப்யூட்டர் தயாரிப்பில் சர்வ தேச அளவில் பிரபலமாகத் திகழும் லெனோவா நிறுவனம் தமிழகத்தில் தனது விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் மூலமே விற்பனை செய்து வந்த இந் நிறுவனம் இப்போது இரண்டு பிரத்யேக விற்பனையகங்களை சென்னையில் தொடங்கியுள்ளது.

ஸ்மார்ட் கனெக்டட் டிவைசஸ் என பெயரிலான இந்த விற்பனை யகங்கள் டெல்லி, புனேயில் மிகவும் பிரபலம். தற்போது சென்னையிலும் இத்தகைய விற்பனையகங்களைத் திறந்து தனது விற்பனைச் சந்தையை விரிவுபடுத்த நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.

ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்கள், லேப்டாப்புகள் உள்ளிட்ட அனைத்து பொருள் களும் இந்த விற்பனையகத்தில் கிடைக்கும். அதேபோல அனைத்து தொழில் நுட்ப சேவை களும் இங்கு கிடைக்கும்.

அடுத்த ஆண்டுக்குள் சென் னையில் இதுபோன்ற 16 விற்பனை யகங்களைத் தொடங்கத் திட்ட மிட்டுள்ளது. சென்னையில் தற்போது அண்ணா நகரிலும், பழைய மகாபலிபுரம் சாலை யிலும் விற்பனையகங்கள் திறக் கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x