Published : 20 Feb 2015 10:59 AM
Last Updated : 20 Feb 2015 10:59 AM

இறக்குமதியால் பாதிக்கப்படும் டயர் தொழில்

ஆட்டோமொபைல் துறையில் மிகவும் பிரதானமாக விளங் குவது டயர் தொழிலாகும். இப்போது இந்தத் தொழில் இறக்குமதி செய்யப்படும் டயர் களால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் டயர் களால் உள்நாட்டு விற்பனை பெரு மளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இறக்குமதி செய்யப் படும் டயர்களுக்கு 20 சதவீத சுங்க வரி விதிக்க வேண்டும் என்று அகில இந்திய டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. தற்போது இறக்குமதி செய்யப்படும் டயர்கள் மீது 10 சதவீத சுங்க வரி விதிக்கப்படுகிறது.

சுங்க வரி குறைவாக இருப் பதால், இறக்குமதி செய்யப்படும் டயர்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் டயர்களின் விலை யைக் காட்டிலும் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இது உள்ளூர் தொழிலைக் கடுமை யாகப் பாதித்துள்ளது.

இயற்கை ரப்பருக்கு விதிக்கப் படுவதைப் போன்று டயர்களுக்கும் கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்று டயர் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இப்போது இறக்குமதி செய்யப் படும் ரப்பருக்கு 20 சதவீதம் சுங்க வரிவிதிக்கப்படுகிறது. இதேபோல டயருக்கும் சுங்க வரி விதிக்க வேண்டும் என இச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டில் இயற்கை ரப்பர் தொழில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இறக்குமதி செய்யப்படும் ரப்பருக்கு 20 சதவீத சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதேபோல டயருக்கும் விதிக்க வேண்டும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசு பல்வேறு நாடு களுடன் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தின் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கப்படுகிறது. சில நாடுகளிலிருந்து இறக்குமதி யாகும் டயர்களுக்கு முற்றிலுமாக வரி விலக்கு அளிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி யாகும் டயருக்கு 5 சதவீதமும் பிற தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் டயர்களுக்கு முற்றிலு மாக சுங்க வரி விலக்கும் அளிக் கப்படுகிறது.

``மேக் இன் இந்தியா’’ திட்டத் தின்படி உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமெனில் இறக்குமதியாகும் பொருள்கள் மீதான வரி விதிப்பு உள் நாட்டுதொழிலை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும், அதாவது மூலப் பொருளுக்கு விதிக்கப்படும் வரியின் அளவே முழுமையாக தயாரிக்கப்படும் பொருளுக்கும் விதிக்க வேண்டும் என்று பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் டயர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரகுபதி சிங்கானியா வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் டயர் இறக் குமதியானது பல்வேறு வழியாக அதாவது விருப்பத்தின் பேரில், வர்த்தக ஒப்பந்தத்தால் அளிக்கப்படும் வரிச்சலுகை அடிப்படையில் மேற்கொள் ளப்படுகிறது.

டயர் என்பது முற்றிலும் முழுமையான தயாரிப்புப் பொருளாகும். இதற்காக செலுத் தப்படும் வரியை மாற்றுவது இயலாது. ஆனால் சமீபகாலமாக இந்த நிலை தொடர்கிறது, வரும் பட்ஜெட்டிலாவது இது மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமீப காலமாக டயர் தொழிற் சாலை அதிக முதலீடுகளை ஈர்த்துவருகிறது. ரூ. 26 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழிற் சாலைகள் அமைய உள்ளன.

இத்தகைய சூழலில் இறக்குமதி வரிகள் குறைவாக இருந்தால் அது தொழிலைப் பாதிக்கும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான ரேடியல் டயர்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் உள்நாட்டு டயர் உற்பத்தி யாளர்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது.

அதேசமயம் உள்நாட்டுத் தொழில்களுக்குத் தேவையான மூலப் பொருள்கள் உள்நாட்டில் போதுமான அளவு இல்லாதபோது இறக்குமதி தவிர்க்க முடியா ததாகும்.

டயர் உற்பத்திக்கு மூலப் பொருள்களான நைலான் டயர் கார்ட் ஃபேப்ரிக், ரப்பர் ரசாயனப் பொருள்கள், ஸ்டீல் டயர் கார்ட், பாலியஸ்டர் டயர் கார்ட், பாலிபுடேடைன் ரப்பர் ஆகியன உள்நாட்டில் குறைவாக உள்ளன.

இவற்றை இறக்குமதி செய்வதில் விதிக்கப்படும் வரி முறை சீரமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல பியூடைல் ரப்பர், இபிடிஎம், ஸ்டிரைன் புடாடைன் ரப்பர் ஆகியன உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

இத்தகைய மூலப் பொருள் களுக்கு முற்றிலுமாக இறக்குமதி வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவையனைத்தும்தான் உள்நாட்டில் பொருள் உற்பத்திச் செலவை அதிகரிக்கச் செய் கிறது. இதனால் பன்னாட்டு நிறுவனங்களுடன் இந்திய தயாரிப்புகள் போட்டியிட முடியாத சூழலை உருவாக்குகின்றன என்றும் டயர் உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சூழலை போக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் துறைக்கு பிரதானமான டயர் தொழிலை அரசு கவனித்தால் மட்டுமே ஆட்டோ மொபைல் தொழில் வளர்ச்சி யடையும் என்று இத்துறையினர் கருத்து தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x