Published : 05 Jan 2015 10:27 AM
Last Updated : 05 Jan 2015 10:27 AM

‘மேக் இன் இந்தியா’ பேஸ்புக்கில் பின் தொடருபவர்கள் 30 லட்சம்

மேக் இன் இந்தியா பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி மூன்று மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்துவைத்தார்.

இதனுடைய பேஸ்புக் பக்கத்தை 30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்று அரசு அறிக்கை தெரிவிக்கிறது. நேற்று மதிய நிலவரப்படி 3,012,671 பேர் இந்த பேஸ்புக் பக்கத்தை பின் தொடர்கிறார்கள்.

மேலும் ஒவ்வொரு மூன்று நிமிடத்துக்கு ஒருவர் புதிதாக இந்த பக்கத்தில் இணைகிறார் என்று அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. அரசாங்கத்தின் வேறு எந்த துறைகளுக்கும் இந்தளவு வரவேற்பு இல்லை. தனியார் துறை நிறுவனங்களில் கூட இந்த வரவேற்பு மிகச்சில நிறுவனங்களுக்கு மட்டுமே இருந்தது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டிவிட்டர் இணைய தளத்தில் 2.63 லட்சம் நபர்கள் மேக் இன் இந்தியா பக்கத்தை பின் தொடர்கிறார்கள்.

சமூக வலைதளங்கள் மட்டு மல்லாமல் மேக் இன் இந்தியா இணையதளத்துக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. உலகம் முழுக்க 17 லட்சம் வாடிக் கையாளர்கள் இந்த பக்கத்தை பார்த்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x