Published : 12 Dec 2014 09:48 AM
Last Updated : 12 Dec 2014 09:48 AM

விக்ரம் அகுலா - இவரைத் தெரியுமா?

$ எஸ்.கே.எஸ். மைக்ரோபைனான்ஸ் நிறுவனத்தின் நிறுவனர். 1997-ம் ஆண்டு நிறுவனத்தை ஆரம்பித்து 2011-ம் ஆண்டு வெளியேறினார்.

$ 1990களில் மகளிர் சுய உதவிக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். சில வருடங்களுக்கு பிறகு வாஷிங்டனில் இருக்கும் வேர்ல்ட் வாட்ச் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார். கிடைத்த அனுபவத்தைக் கொண்டு லாப நோக்கு அற்ற நிறுவனமாக எஸ்.கே.எஸ். மைக்ரோபைனான்ஸைத் தொடங்கினார்.

$ 2005-ம் ஆண்டு எஸ்.கே.எஸ். நிறுவனத்தை லாப நோக்கு நிறுவனமாக மாற்றினார். 2010-ம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிட்டார்.

$ ஆங்கிலம் மற்றும் தத்துவயியலில் இளங்கலை பட்டமும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் (அரசியல் அறிவியல்) பெற்றவர்.

$ எர்னஸ்ட் அண்ட் யங், உலகபொருளாதார மையம், டைம் இதழ் ஆகியவை இவரை கவுரவித்திருக்கிறது. மெக்கென்ஸி நிறுவனத்தில் ஆலோசகராக சில காலம் இருந்தார்.

$ தற்போது Vaya Finserv நிறுவனத்தில் 26 சதவீத பங்குகளை வாங்கி இருக்கிறார். சிறிய வங்கி தொடங்கும் திட்டத்தில் இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x