Published : 01 Dec 2014 09:31 AM
Last Updated : 01 Dec 2014 09:31 AM

ஷரியா முதலீட்டுக்கு வரிவிலக்கு வேண்டும்

ஷரியா வகை மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பங்கு சார்ந்த முதலீடு திட்டங்களுக்கு வழங்கப்படும் வரிவிலக்கு போல, ஷரியா மியூச்சுவல் பண்ட் திட்டங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புகையிலை, மது மற்றும் இஸ்லாம் தடை செய்துள்ள தொழில்களில் முஸ்லீம் மக்கள் முதலீடு செய்வதில்லை. நாட்டின் பெருவாரியான முஸ்லீம்கள் பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதற்கு ஷரியா மியூச்சுவல் பண்ட் வழி செய்கிறது.

எஸ்பிஐ பரஸ்பர நிதியம் இந்த வகையிலாக ஷரியா நிதியத்தை கொண்டுவர உள்ள நிலையில், இந்த முதலீட்டுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஷரியா நிதிய முதலீட்டுக்கு வரிச்சலுகையோ, வரிவிலக்கோ அளிக்கப்படவில்லை. ஷரியா மியூச்சுவல் பண்ட்களுக்கு தனியாக வரிச்சலுகை கொடுப்பதன் மூலம் அதிகமான மக்களிடம் இந்த திட்டத்தை கொண்டு சேர்க்க முடியும் என்று பொருளாதார ஆலோசகர் சயத் ஜாகித் அகமத் தெரிவித்தார்.

’’நாட்டின் பெருவாரியான மக்கள் வேறு எந்த முதலீடு திட்டங்களிலும் முதலீடு செய்யாமல் இருக்கிறார்கள். அதுபோன்றவர்களை இந்த திட்டத்தின் மூலம் பங்குச்சந்தைக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்’’ என்கிறார் எஸ்பிஐ தலைமை மார்கெட்டிங் அதிகாரி டி.பி.சிங். 12 மாதங்களுக்கும் மேலான பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் முதலீடுகளுக்கு மூலதன ஆதாய வரி கணக்கிடப்படுகிறது. அதாவது வரி கிடையாது. அதே நடைமுறை ஷரியா நிதியத்துக்கும் பொருந்தும்.

கடந்த ஆண்டு பி.எஸ்.இ. ஷரியா குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த குறியீடு கடந்த ஒரு வருடத்தில் 44.55 சதவீத வருமானம் கொடுத்திருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் சென்செக்ஸ் 39.20 சதவீத வருமானம் கொடுத்தது.ஷரியா வகை மியூச்சுவல் பண்டினை கொண்டுவரும் நான்காவது நிறுவனம் எஸ்பிஐ என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x