Published : 22 Jul 2017 09:17 AM
Last Updated : 22 Jul 2017 09:17 AM

வருவாயைக் குறைத்து காண்பித்த 6 நிறுவனங்கள்: சிஏஜி அறிக்கையில் தகவல்

2010-11 முதல் 2014-15 ஆண்டுகள் வரை பார்தி ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உட்பட 6 தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்கள் வருவாயை ரூ.61,064 கோடி அளவுக்கு குறைத்துக் காட்டியுள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கை (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து மத்திய அரசுக்கு ரூ.7,697 கோடி குறைவான வருவாய் வந்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை சமர்பிக்கப்பட்டது. 6 நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் ரூ.61,064 கோடி தொகையைக் குறைத்துக் காண்பித்தது இந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் ஆகிய இந்த 5 நிறுவனங்களுக்கான தணிக்கை ஆண்டுக் காலம் 2010-11 முதல் 2014-15 வரை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாறாக, சிஸ்டிமா ஷியாம் நிறுவனத்திற்கான தணிக்கை ஆண்டு 2006-07 முதல் 2014-15 வரையாகும். குறைந்த வருவாய் காண்பித்ததால் மத்திய அரசுக்குச் சேர வேண்டிய தொகையில்ரூ.7,697.62 கோடி இழப்புஏற்பட்டுள்ளது. இவ்வாறு சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x